தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள தொகுதி -4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி – 4 தேர்வு வினாத்தாளில் தமிழ்மொழி குறித்த பெரும்பாலான வினாக்கள் கடினமாகப் பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமானவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ்வழியில் பயின்ற தேர்வர்களைப் போட்டியிலிருந்தே வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக்கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


