
மகளிர் பிரீமியர் லீக் இருபது ஒவர் கிரிக்கெட் போட்டியில் உ.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் இருபது ஒவர் கிரிக்கெட் போட்டியின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகபட்சமாக தீப்தி சர்மா 55 ரன்களும் மெக் லேனிங் 41 ரன்களும் எடுத்தனர்.
பந்து வீச்சு தரப்பில் ஆர்சிபி அணி நாடின் டி கிளார்க் 4 விக்கெட்களும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 13 ஓவரில் 2 விக்கெட்டு இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் பெங்களூரு அணி 6 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. இதில், அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் 75 ரன்களும் ஸ்மிருதி மந்தனா 54 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகை செய்தனர்.



