
அமெரிக்காவில், அதிபர் டொனால்ட்- டிரம்பிற்கு எதிராக, அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும், 2-ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதலே, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு என அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அமெரிக்க அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக, உள்நாட்டிலும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளையும் டொனால்ட்-டிரம்ப் எடுத்தார்.
டொனால்ட்-டிரம்பின் நடவடிக்கையால், அமெரிக்காவிலும் விலை வாசி உயர்ந்தது. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, இங்கு யாரும் மன்னர் இல்லை என்ற வலியுறுத்தலுடன், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும், 2-ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட்-டிரம்ப், இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது என்றும் போராட்டக்காரர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகிறார்கள்.
நான் மன்னர் இல்லை. அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும், அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



