கூட்டணியை திறமையாக கையாண்டவர் அண்ணாமலை – தினகரன் பேச்சு

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது கூட்டணியைத் திறமையாகக் கையாண்டதாகவும், கூட்டணியில் இருந்து பலரும் வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்றும் அமமுக
பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முதலில் பன்னீர்செல்வமும், அதன்பிறகு அமமுகவும் வெளியேறி விட்டன. தூத்துக்குடிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது அவரைச் சந்தித்துப் பேசத் தான் முயன்றதாகவும்,
நாகேந்திரன் அதற்குத் தடையாக இருந்ததாகவும் பன்னீர்செல்வம் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது கூட்டணியைத் திறமையாகக் கையாண்டதாகவும், நயினார் நாகேந்திரனுக்குக் கூட்டணியைக் கையாளும் திறமை இல்லை
என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *