
தஞ்சாவூர் மாவட்ட பாமக செயலாளரைக் கொல்ல முயன்றோரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் தஞ்சாவூர் மாவட்ட பாமக செயலாளரைக் குண்டு வீசிக் கொல்ல முயன்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே இந்த முயற்சி நடைபெற்றிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் திமுக அரசுக்குச் சிறிதும் அக்கறை இருந்தால், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


