ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து 292 இந்தியர்கயர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியாக அந்நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த வகையில் ஈரானின் மஷாஹத்தில் இருந்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் டில்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இதனை
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து சிந்து நடவடிக்கையை மேற்கொண்டதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
தற்போது வரை மொத்தம் 2,295 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

