போர் நிறுத்ததை தற்போது ஈரான் அறிவித்த நிலையில் அதனை டிரம்ப் மீற வேண்டாம் என அறிவுறுத்தல்

போர் நிறுத்ததை தற்போது ஈரான்  அறிவித்த நிலையில் அதனை டிரம்ப் மீற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து,கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந் நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையே  போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப்,              போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதாகவும், தயவுசெய்து அதை மீற வேண்டும்  எனவும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *