அமெரிக்க குடியுரிமை ஆதாரம் கட்டாயம்..!

Advertisements

அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது  நடைபெற்ற மோசடிகளைத்  தான் திருத்தம் செய்யப் போவதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த  அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும்  அந்தக் கட்டுப்பாடுகளைத் தான் கொண்டு வரப்போவதாகவும் கூறியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் ஓட்டளிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை கண்டிப்பாக  காட்ட வேண்டும் என்றும் மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை என்றார். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும், பின்பற்றுவதற்காக போராடுமாறு  கேட்டுக்கொள்வதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *