புதின் தடுத்து நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்து – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Advertisements

ரஷ்ய அதிபர் புதினை தடுத்து நிறுத்தவில்லை என்றால், ஐரோப்பிய நாடுகளுக்குப் போரை விரிவுபடுத்துவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்தார்.

என்பதாவது ஐநா பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியபோது, ரஷ்ய அதிபர் புதினை தடுத்து நிறுத்தவில்லை என்றால், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளுக்குப் போரை விரிவுபடுத்துவார் என எச்சரித்தார்.

ரஷிய டிரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன என்றும் எனவே ரஷியாவை இப்போதே தடுத்து நிறுத்த ஐ. நா கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர், நேச நாடுகள் ஒன்றிணைந்து உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பிற நாடுகளைக் காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்தார். டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்கள், பாரம்பரியப் போர்களை விட அதிக ஆபத்தை உருவாக்குகின்றன என்று கூறினார்.

ராணுவ ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது குறித்து சர்வதேச விதிகள் தேவை என்றும் குறிப்பிட்டார். சர்வதேச அமைப்புகள் உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவதில் மிகவும் பலவீனமாக செயல்படுகின்றன எனக் குற்றம் சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *