
ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா, வங்கதேசத்தை வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
17 ஆவது ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, முதலில் களம் இறங்கிய இந்தியா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடித்து 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர், பாண்ட்யா 38 ரன்களும் சுப்மன் கில் ரன்களும் சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 19 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து, 41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது



