புத்தாண்டு பலன் – 2023 (துலாம் முதல் மீனம் வரை)
துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

வாழ்வில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை சமமாக பாதிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே, பிறர் செய்யும் தவறுகளை உரிமையோடு தட்டிக் கேட்கும் தைரியம் கொண்ட உங்களுக்கு இதுநாள் வரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரித்த சனி பல்வேறு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தினார். வரும் 17-01-2023 முதல் சனிபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை பெறுவீர்கள்.
இதுநாள் வரை இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் விலகி சகல விதத்திலும் ஏற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் இருந்து வந்த உடல் சோர்வுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக அனுகூலமான பலன்களை பெற முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும்.
தொழில் ரீதியாக கடந்த காலங்களில் இருந்து வந்த பொருட் தேக்கங்கள் விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவும், போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய பலமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து சுமூகமாக பணிபுரியக்கூடிய அமைப்பு, உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நிலை வரும் நாட்களில் ஏற்படும்.
ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் 22-04-2023 முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள், மறைமுக எதிர்ப்புகள் விலகி மன நிம்மதியான நிலை, குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஒரு சிலருக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது 30-10-2023 முடிய ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு என சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பொதுவாக உடனிருப்பவர்களிடம் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆக வரும் 2023-ஆம் ஆண்டில் உங்களுக்கு பொருளாதார மேன்மை, நீங்கள் நினைத்தது நடக்கும் யோகம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
கடந்த கால அலைச்சல்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை ஏப்ரலுக்கு பிறகு செயல்படுத்தினால் மிகவும் சாதகமான பலனை பெற முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏப்ரலுக்கு பிறகு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் குறையும். கடந்த கால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும். ஏப்ரலுக்கு பிறகு உங்கள் பொருளாதார நிலை மேலும் சிறப்பாகி உங்கள் வாழ்க்கை தரம் உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும். பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
பெண்கள்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
மாணவ மாணவியர்
மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிரபாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் பொறுமையை கடைபிடிக்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. துர்க்கை வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 02-01-2023 இரவு 08.50 மணி முதல் 05-01-2023 காலை 08.05 மணி வரை மற்றும் 30-01-2023 அதிகாலை 02.45 மணி முதல் 01-02-2023 பகல் 02.00 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 26-02-2023 காலை 10.15 மணி முதல் 28-02-2023 இரவு 08.32 மணி வரை.
மார்ச்.
குரு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் குறையும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். 7-ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். துர்கையம்மனையும், முருகரையும் வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் – 25-03-2023 இரவு 07.25 மணி முதல் 28-03-2023 அதிகாலை 04.25 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 5-ல் சனி, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வரும் 22-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகரையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 22-04-2023 அதிகாலை 05.00 மணி முதல் 24-04-2023 பகல் 01.13 மணி வரை.
மே.
ஜென்ம ராசிக்கு 5-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இம்மாதத்தில் ராகு 7-ல், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். சிவ வழிபாடு, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 19-05-2023 பகல் 01.35 மணி முதல் 21-05-2023 இரவு 09.46 மணி வரை.
ஜுன்.
ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றங்களையும், பொருளாதார ரீதியாக உயர்வுகளையும் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ராகு 7-ல், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சூரிய நமஸ்காரம் செய்வது, துர்க்கைக்கு தீபம் ஏற்றுவதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் – 15-06-2023 இரவு 08.23 மணி முதல் 18-06-2023 அதிகாலை 05.12 மணி வரை.
ஜுலை.
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய மாதமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெருமாள் வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 13-07-2023 அதிகாலை 01.58 மணி முதல் 15-07-2023 பகல் 11.23 மணி வரை.
ஆகஸ்ட்.
மாத கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 7-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமான பலன்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கடன்கள் குறைந்து வீடு, மனை வாங்க கூடிய யோகம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில், வியாபார ரீதியாக உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சர்பேஸ்வரர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 09-08-2023 காலை 07.42 மணி முதல் 11-08-2023 மாலை 04.58 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு குரு 7-ல், புதன் 11-ல் சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபார விருத்திக்காக எதிர்பார்த்த பண உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். அரசு அதிகாரிகள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 05-09-2023 மாலை 03.00 மணி முதல் 07-09-2023 இரவு 11.13 மணி வரை.
அக்டோபர்.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 12-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதாலும் எதிலும் சிக்கனமாகவும், நிதானத்துடனும் இருப்பது நல்லது. ஒரு புறம் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், முடிந்த வரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். உடனிருப்பவர்களின் ஆதரவுடன் எதையும் சமாளிப்பீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 02-10-2023 இரவு 12.15 மணி முதல் 05-10-2023 காலை 06.58 மணி வரை மற்றும் 30-10-2023 காலை 10.28 மணி முதல் 01-11-2023 மாலை 04.10 மணி வரை.
நவம்பர்.
மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வர வேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும் ராகு 6-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளை குறைப்பது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடைய முடியும். சிவனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 26-11-2023 இரவு 07.55 மணி முதல் 29-11-2023 அதிகாலை 01.40 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சியும், மனநிம்மதியும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகி வலமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மகாலட்சுமி, விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 24-12-2023 அதிகாலை 03.17 மணி முதல் 26-12-2023 காலை 09.57 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 4,5,6,7,8 நிறம் – வெள்ளை, பச்சை கிழமை – வெள்ளி, புதன்
கல் – வைரம் திசை – தென் கிழக்கு தெய்வம் – லக்ஷ்மி
விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

செவ்வாயின் ராசியின் பிறந்த நீங்கள் பார்ப்பதற்கு வெகுலியாக இருந்தாலும் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 30-10-2023 முடிய 6-ல் சஞ்சரிரிப்பதும், அதன் பிறகு கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் நினைத்ததை ஆண்டின் தொடக்கத்தில் முயற்சித்தால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடக் கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் எண்ணங்கள் நிறைவேற கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
வரும் 22-04-2023 முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குரு 6-ல் சஞ்சரிக்கும் பொழுது தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசிக்கு 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொண்டு அணுகூலங்களை அடைவீர்கள்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனத்தோடு செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உங்கள் மீது வீண் பழிச் சொற்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது வெளி நபர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது.
ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கக்கூடிய கிரகமான சனி வரும் 2023-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் 17-01-2023 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்க உள்ளது. இதன் காரணமாக அலைச்சல், டென்ஷன், வசதி வாய்ப்பு இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அதிக வேலைப்பளு காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பதால் மன அமைதி ஏற்படும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் உங்கள் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரலுக்குள் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.
உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தொழில், வியாபாரம்
உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் தடைபடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகள், தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எடுத்த ஆடர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும்.
அரசியல்
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டி இருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
கலைஞர்கள்
எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் வளமான பலனை பெற முடியும். தூர பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் படபிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறை பாடுபட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாது இருப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது.
மாணவ- மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றி பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பயணங்களின் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். தாராள தனவரவுகள், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் நிலை உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம், செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 05-01-2023 காலை 08.05 மணி முதல் 07-01-2023 இரவு 08.23 மணி வரை.
பிப்ரவரி.
ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு, 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாத முற்பாதியில் சூரியன் 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சரளமாக அமைந்து நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடையலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். பைரவரையும், விஷ்ணுவையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 01-02-2023 பகல் 02.00 மணி முதல் 04-02-2023 அதிகாலை 02.30 மணி வரை மற்றும் 28-02-2023 இரவு 08.32 மணி முதல் 03-03-2023 காலை 08.58 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசிக்கு 4, 5-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். 4, 5-ல் சூரியன், 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 28-03-2023 அதிகாலை 04.25 மணி முதல் 30-03-2023 மாலை 04.15 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குறிப்பாக இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்களும், பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற பாராட்டுதல்களும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். முருகரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 24-04-2023 பகல் 01.13 மணி முதல் 26-04-2023 இரவு 12.18 மணி வரை.
மே.
ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிறைந்திருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். குரு 6-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருக்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் சிறுசிறு அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறமுடியும். சனி ப்ரீதி செய்வது மகாலட்சுமியை தரிசிப்பது நல்லது.
சந்திராஷ்டமம் – 21-05-2023 இரவு 09.46 மணி முதல் 24-05-2023 காலை 08.26 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். சிவ வழிபாடு, தட்சிணாமூரத்திக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 18-06-2023 அதிகாலை 05.12 மணி முதல் 20-06-2023 மாலை 03.58 மணி வரை.
ஜுலை.
மாத முற்பாதியில் 8-ல் சூரியன், 6-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ராகு 6-ல், சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 15-07-2023 பகல் 11.23 மணி முதல் 17-07-2023 இரவு 10.30 மணி வரை.
ஆகஸ்ட்.
ராசியதிபதி செவ்வாய் 10, 11-ல், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 11-08-2023 மாலை 04.58 மணி முதல் 14-08-2023 அதிகாலை 04.25 மணி வரை.
செப்டம்பர்.
செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அர-சு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். விஷ்ணு வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 07-09-2023 இரவு 11.13 மணி முதல் 10-09-2023 காலை 10.25 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து ஏற்றங்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார ரீதியாக உயர்வுகள் ஏற்பட்டு உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 05-10-2023 காலை 06.58 மணி முதல் 07-10-2023 மாலை 05.18 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 12 மற்றும் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லது சொன்னால் கூட மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளும் நேரம் என்பதால் பேச்சை குறைத்துக் கொள்வது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவன், அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 01-11-2023 மாலை 04.10 மணி முதல் 04-11-2023 அதிகாலை 01.23 மணி வரை மற்றும் 29-11-2023 அதிகாலை 01.40 மணி முதல் 01-12-2023 காலை 10.12 மணி வரை.
டிசம்பர்.
மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. பணவரவுகள் ஒரளவு சிறப்பாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். சிவபெருமானையும் முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 26-12-2023 காலை 09.57 மணி முதல் 28-12-2023 மாலை 06.37 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை – செவ்வாய், வியாழன்
கல் – பவளம், திசை – தெற்கு தெய்வம் – முருகன்
தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

பிறருக்கு உதவி செய்வதில் முன் நின்று செயல்படக்கூடிய தனுசு ராசி நேயர்களே, நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதை செய்வதென்றாலும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து செய்யும் திறன் கொண்டவராக செயல்படுவீர்கள். வரும் 2023-ஆம் ஆண்டில் உங்களுக்கு இது நாள் வரை நடைபெற்று வந்த ஏழரைச் சனி 17-01-2023-ல் முழுமையாக முடிவதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
குடும்பத்தில் ஏற்பட்ட கடந்த கால மருத்துவ செலவுகள் குறைய கூடிய நிலை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடலில் ஒரு நல்ல முன்னேற்றம் வருகின்ற நாட்களில் ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சங்கடங்கள் எல்லாம் முழுமையாக குறைந்து மன நிம்மதி அடைவீர்கள்.
பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். தொழில் ரீதியாக கடுமையான தேக்க நிலையை எதிர்கொண்ட உங்களுக்கு வரும் நாட்கள் சந்தை சூழ்நிலை முற்றிலும் உங்களுக்கு சாதகமாக மாறி உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல லாபங்களும் சமுதாயத்தில் ஒரு நல்ல உயர்வும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு நட்புடன் பழகக் கூடிய ஒரு சூழல் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த கால வேலைபளு எல்லாம் குறைந்து சுபிட்சமான நிலை ஏற்படும்.
ஆண்டின் தொடக்கத்தில் சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குருபகவான் வரும் 22-04-2023 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். ஏப்ரலுக்கு பிறகு உங்களது பலமும், வலிமையும் மேலும் அதிகரிக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை ஏற்படும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைக்கு எல்லாம் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக நல்ல தீர்வு கிடைக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு வரும் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.
நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை அடைய முடியும்.
வரும் 2023-ஆம் ஆண்டில் சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 5-லும், கேது 11-லும் 30-10-2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளனர். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பல்வேறு அணுகூலமான பலன்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு சிறப்பான அமைப்பாகும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உறவுகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் மேலும் வளமான பலன்களை வரும் 2023-ஆம் ஆண்டில் அடைய முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிலும் புதுத் தெம்புடனும் பொலிவுடனும் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும், நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரண கோளாறுகள் உண்டாக்குவதை தவிர்க்க உதவும்.
குடும்பம் பொருளாதார நிலை
மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் மன கவலை உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வாழ்வில் நல்லது நடக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி, மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும்.
உத்தியோகம்
கடந்த கால நெருக்கடிகள் விலகி பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். செய்யும் வேலைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் கிட்டும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். திறமை உள்ள வேலையாட்கள் கிடைப்பார்கள்.
கொடுக்கல் வாங்கல்
பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றிக் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும்.
அரசியல்
உங்களது பெயர், புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் எல்லாம் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்கள் நற்பலனை தரும்.
கலைஞர்கள்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்ல நேரிடும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து மன நிம்மதி உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்கள்
உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
மாணவ மாணவியர்
மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். போட்டி தேர்வுகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உங்களுக்கு இருந்த மந்த நிலை மாறி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் குரு 4-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 07-01-2023 இரவு 08.23 மணி முதல் 10-01-2023 காலை 09.00 மணி வரை.
பிப்ரவரி.
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிக்கும். தட்சிணாமூர்த்தி, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 04-02-2023 அதிகாலை 02.30 மணி முதல் 06-02-2023 மாலை 03.03 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். கடந்த கால நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது, மற்றவர்களை நம்பி வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்குதல், புது வீடு குடிபுகும் யோகம் போன்றவை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக ஏற்றமிகுப் பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சர்பேஸ்வரரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 03-03-2023 காலை 08.58 மணி முதல் 05-03-2023 இரவு 09.30 மணி வரை மற்றும் 30-03-2023 மாலை 04.15 மணி முதல் 02-04-2023 அதிகாலை 04.48 மணி வரை.
ஏப்ரல்.
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் புதன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். வரும் 22-ஆம் தேதி முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களினால் அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப்பெற்று பெயர், புகழ் உயரும். கடன்கள் படிப்படியாக குறையும். சிவனையும், முருகரையும் வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 26-04-2023 இரவு 12.18 மணி முதல் 29-04-2023 பகல் 12.48 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் மாதமாக இம்மாதம் இருக்கும். உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தாராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்து விட முடியும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகரையும், துர்க்கையம்மனையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 24-05-2023 காலை 08.26 மணி முதல் 26-05-2023 இரவு 08.50 மணி வரை.
ஜுன்.
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்பு, அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து ரீதியாக உள்ள சிக்கல் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். முருகர் வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 20-06-2023 மாலை 03.58 மணி முதல் 23-06-2023 அதிகாலை 04.18 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 5-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். 5-ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவிற்கு எந்தவிதத்திலும் குறை இருக்காது. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன் பிரச்சினைகளும் குறையும். 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சிவன், துர்கையம்மன் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.
சந்திராஷ்டமம் – 17-07-2023 இரவு 10.30 மணி முதல் 20-07-2023 காலை 10.55 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு செவ்வாய் 9, 10-ல் சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் உண்டாகும். பாம்பு புற்றுக்கு பால் விடுவது, உக்கர தெய்வங்களை தரிசிப்பது நன்மையை தரும்.
சந்திராஷ்டமம் – 14-08-2023 அதிகாலை 04.25 மணி முதல் 16-08-2023 மாலை 04.58 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், மறைமுக எதிர்ப்புகள் குறையும் சூழல் உண்டாகும். சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், நவீன கருவிகளை வாங்கும் யோகமும் உண்டு. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அம்மன் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 10-09-2023 காலை 10.25 மணி முதல் 12-09-2023 இரவு 11.00 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி முன்னேற்றத்தை அடைய முடியும். தொழில், வியாபார அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த பண உதவிகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதுடன் எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 07-10-2023 மாலை 05.18 மணி முதல் 10-10-2023 அதிகாலை 05.45 மணி வரை.
நவம்பர்.
சனி 3-ல், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பலம் உண்டாகும். உங்களது மதிப்பு, மரியாதை மேலோங்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு வக்ர கதியில் இருப்பதால் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கவனத்துடன் கையாண்டால் லாபம் கிடைக்கும். உக்ர தெய்வங்களை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 04-11-2023 அதிகாலை 01.23 மணி முதல் 06-11-2023 பகல் 01.22 மணி வரை.
டிசம்பர்.
சூரியன், செவ்வாய் 12-ல் மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். முன்கோபத்தையும், பேச்சையும் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஒரளவுக்கு நற்பலனை பெற முடியும். குடும்பத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். சனி 3-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்களது சிக்கல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தனி திறமையால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்களை அடைய முடியும். சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 01-12-2023 காலை 10.12 மணி முதல் 03-12-2023 இரவு 09.35 மணி வரை மற்றும் 28-12-2023 மாலை 06.37 மணி முதல் 31-12-2023 அதிகாலை 05.42 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – மஞ்சள், பச்சை கிழமை – வியாழன், திங்கள்
கல் – புஷ்ப ராகம் திசை – வடகிழக்கு தெய்வம் – தட்சிணா மூர்த்தி
மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் உங்களுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதில் மன உறுதியோடு செயல்படும் மகர ராசி நேயர்களே, சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு இது நாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி வரும் 17-01-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி முடிந்தாலும் பாத சனி தொடரும். உங்கள் உடல் ஆரோக்கியமானது சற்று சிறப்பாக இருக்கும். குடும்ப ஸ்தானமான 2-ல் சனி சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
குறிப்பாக குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். பொருளாதார நிலையானது முன்பை விட தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 22-04-2023 வரை 3-ஆம் வீட்டிலும் அதன் பிறகு 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளார். 2023-ஆம் ஆண்டில் பண விஷயத்தில் நீங்கள் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது குறிப்பாக கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்பு உண்டு.
தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை தற்காலிகமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக உங்கள் பெயரில் முதலீடு செய்வதை விட குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலில் ஒரு சில அனுகூலமான பலன்களை அடைய முடியும். உத்தியோக ரீதியாக உங்கள் பணியில் கவனத்தோடு செயல்படுவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும்.
சர்ப்ப கிரகமான ராகு, கேது 30-10-2023 வரை 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க இருக்கின்றனர்.
குறிப்பாக வண்டி, வாகனங்கள் மூலம் வீண் செலவுகள், அசையா சொத்துக்கள் மூலமாக எதிர்பாராத செலவுகளை வரும் நாட்களில் எதிர்கொள்ள நேரிடும். 2023-ஆம் ஆண்டில் நீங்கள் எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கலாம்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களால் உடல் நிலையில் சோர்வு ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
பொருளாதார ரீதியாக பணவரவுகளில் முன்னேற்றம் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது.
உத்தியோகம்
பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.
அரசியல்
பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.
கலைஞர்கள்
பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.
மாணவியர்
கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை ஏற்படும் நேரம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் வீண் வாக்கு வாதங்களை குறைத்து கொண்டு படிப்பில் கவனமாக செயல்பட்டால் நற்பெயரை பெறுவீர்கள்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 12, 1-ல் சூரியன், 3-ல் குரு சஞ்சரிப்பதால் மன நிம்மதி குறைவுகள், வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு கெடுதியை குறைக்கும்.
சந்திராஷ்டமம் -10-01-2023 காலை 09.00 மணி முதல் 12-01-2023 இரவு 09.00 மணி வரை.
பிப்ரவரி.
ஜென்ம ராசியில் சூரியன், 3-ல் குரு, 4-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சுக்கிரன் ஜென்ம ராசியில் உள்ளதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் புத்திர வழியில் சில நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேக்க நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது-. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், நிம்மதி குறைவு ஏற்படும். துர்க்கை, சிவனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 06-02-2023 மாலை 03.03 மணி முதல் 09-02-2023 அதிகாலை 02.50 மணி வரை.
மார்ச்.
இம்மாத பிற்பாதியில் 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலமும் வலிமையும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் சற்று குறையும். கடந்த கால பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 05-03-2023 இரவு 09.30 மணி முதல் 08-03-2023 காலை 08.53 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன், 6-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலக கூடிய அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் பலமும், வலிமையும் கூடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பேச்சில் பொறுமையுடன் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கை, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 02-04-2023 அதிகாலை 04.48 மணி முதல் 04-04-2023 மாலை 04.05 மணி வரை மற்றும் 29-04-2023 பகல் 12.48 மணி முதல் 01-05-2023 இரவு 12.20 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை-குறையும். வரும் 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் அலைச்சலும் அதன் மூலம் பண விரயங்களும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். சிவனையும், விநாயகரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 26-05-2023 இரவு 08.50 மணி முதல் 29-05-2023 காலை 08.55 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடனிருப்பவர்களின் உதவியால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். தேவையற்ற அலைச்சலால் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முருகரையும், மகாவிஷ்ணுவையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 23-06-2023 அதிகாலை 04.18 மணி முதல் 25-06-2023 மாலை 04.50 மணி வரை.
ஜுலை.
மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் 4-ல் குரு, ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, வண்டி, வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்துக் கொண்டு கவனமாக செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் ஒரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சற்று சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் குறையும். முருகர், துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 20-07-2023 காலை 10.55 மணி முதல் 22-07-2023 இரவு 11.40 மணி வரை.
ஆகஸ்ட்.
ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, 4-ல் குரு, ராகு, 7, 8-ல் சூரியன், மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். உடனிருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள், பொருளாதார ரீதியாக தேக்க நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்ப ஒற்றுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரையும் அம்மனையும் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 16-08-2023 மாலை 04.58 மணி முதல் 19-08-2023 அதிகாலை 05.40 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் ராகு, மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையா சொத்துகளாலும், வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு, சனி ப்ரீதி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-09-2023 இரவு 11.00 மணி முதல் 15-09-2023 பகல் 11.35 மணி வரை.
அக்டோபர்.
குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக உள்ள நெருக்கடிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். அரசு வகையில் ஒருசில அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். சிலருக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். துர்க்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-10-2023 அதிகாலை 05.45 மணி முதல் 12-10-2023 மாலை 06.15 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். நவீன பொருட்கள் வாங்கக் கூடிய யோகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எடுக்கும் பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் தொடர்புகளால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அஞ்சநேயர் வழிபாடு சுபிட்சத்தை அளிக்கும்.
சந்திராஷ்டமம் – 06-11-2023 பகல் 01.22 மணி முதல் 09-11-2023 அதிகாலை 02.00 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான நிலை என்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுகளால் உங்களது பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 03-12-2023 இரவு 09.35 மணி முதல் 06-12-2023 காலை 10.20 மணி வரை மற்றும் 31-12-2023 அதிகாலை 05.42 மணி முதல் 02-01-2024 மாலை 06.28 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 நிறம் – நீலம், பச்சை கிழமை – சனி, புதன்
கல் – நீலக்கல் திசை – மேற்கு தெய்வம் – விநாயகர்
கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

பிறர் விஷயத்தில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு இக்கட்டான நிலையில் உதவி செய்யக்கூடிய நல்ல பண்பு கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி சனி இது நாள் வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தார், தற்போது வரும் 17-01-2023 முதல் சனி திருக்கணிதபடி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடங்குகிறது. ஜென்மச் சனி நடைபெற உள்ளதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும்.
தேவையில்லாத அலைச்சல், செய்யும் செயல்களில் சுறுசுறுப்பு இல்லாத நிலை, சக்திக்கு மீறிய வீண் செலவுகளை சந்திக்க கூடிய ஒரு நிலை ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அன்றாட பணிகளில் ஈடுபாடற்ற நிலை இருக்கும் என்பதால் முடிந்தவரை உங்கள் பணியில் அக்கறை செலுத்துவது நல்லது.
உங்களின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருப்பது மட்டுமில்லாமல் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகள் வழியில் கூட தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்களது ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டிய நேரமாகும். ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்.
ஆண்டுக்கு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 22-04-2023 வரை தனஸ்தானமான 2-ல் பலமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முதல் நான்கு மாத காலங்கள் உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரு சில எதிர்பாராத லாபங்களை பெற்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது நல்ல வாய்ப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
வரும் 22-04-2023-க்கு பிறகு குரு முயற்சி ஸ்தனமான 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருக்கும் என்பதால் திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் வரும் ஆண்டில் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியாக ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து சென்றால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். கடினமான நெருக்கடியில் நீங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது நல்லது.
உங்கள் பெயரில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது, பிறரை நம்பி பண உதவி செய்வது போன்றவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக தவிர்க்க முடியாத காரணத்தால் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை இருந்தால் உங்கள் பெயரில் முதலீடு செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்வது நல்லது. அசையா சொத்து வகையில் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
சர்ப்ப கிரகமான ராகு 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், உடல் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத அளவிற்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களின் முன் கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும், வீண் பிரச்சினைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணவரவில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உத்தியோகம்
உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும் நேரமாகும். உங்கள் உழைப்பிற்கான ஊதியம் கிடைக்க சிலர் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பணியில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் அசதி காரணமாக சில நேரங்களில் பணியில் கவன குறைவு ஏற்படும். பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் தேவையற்ற போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிடும். சிலர் செய்யும் செயல்களால் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சிக்கல்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை உங்கள் பெயரில் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரமாகும். பொறுப்புகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து அளிப்பது மூலம் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படாவிட்டால் கடன் வாங்க நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் அனைத்து செயலிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற அரும்பாடுபட வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஒரளவுக்கு செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
கலைஞர்கள்
கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால் சற்று அலைச்சல், உடல் சோர்வு உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இடையூறுகள் ஏற்படும். பங்காளி மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் விவசாய பணிகள் செய்வதில் தோய்வு, மன அமைதி குறைவு ஏற்படும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் பொறுமை காப்பது, உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
மாணவ மாணவியர்
ஆரோக்கிய ரீதியாக இருக்கும் சிறுசிறு பாதிப்புகளால் சில நேரங்களில் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும், தேவையற்ற நட்புகளை தவிர்க்க வேண்டிய காலமாகும். கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும், பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும்.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை பெறுவீர்கள். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ஆஞ்சநேயரையும், முருகரையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 12-01-2023 இரவு 09.00 மணி முதல் 15-01-2023 காலை 06.48 மணி வரை.
பிப்ரவரி.
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விநாயக பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 09-02-2023 அதிகாலை 02.50 மணி முதல் 11-02-2023 பகல் 01.02 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது, பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு இருந்தாலும் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 08-03-2023 காலை 08.53 மணி முதல் 10-03-2023 மாலை 06.35 மணி வரை.
ஏப்ரல்.
ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தடைபட்ட திருமண முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். தொழில் ரீதியாக போட்ட முதலீட்டை எடுக்க முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 04-04-2023 மாலை 04.05 மணி முதல் 07-04-2023 அதிகாலை 01.10 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாட்டையும், அஷ்டலட்சுமி வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 01-05-2023 இரவு 12.20 மணி முதல் 04-05-2023 காலை 09.20 மணி வரை மற்றும் 29-05-2023 காலை 08.55 மணி முதல் 31-05-2023 மாலை 06.30 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டியதை அடைவீர்கள். தொழில், உத்தியோக ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களால் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. ஜென்ம ராசியில் சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முடிந்த வரை இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும்.
சந்திராஷ்டமம் – 25-06-2023 மாலை 04.50 மணி முதல் 28-06-2023 அதிகாலை 03.27 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு குரு 3-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிபோகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 3-ல் ராகு, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆஞ்சநேயர், பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 22-07-2023 இரவு 11.40 மணி முதல் 25-07-2023 பகல் 11.13 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக உங்களுக்கு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளிக்கும் பலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருப்பது சிறப்பு. முருகரை வழிபடுவது, சனி ப்ரீதி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 19-08-2023 அதிகாலை 05.40 மணி முதல் 21-08-2023 மாலை 05.30 மணி வரை.
செப்டம்பர்.
ஜென்ம ராசியில் சனி, 8-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமாகும். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. ஆஞ்சநேயரை, முருகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-09-2023 பகல் 11.35 மணி முதல் 17-09-2023 இரவு 11.08 மணி வரை.
அக்டோபர்.
ஜென்ம ராசியில் சனி, மாத முற்பாதியில் 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் செலுத்த முடியாது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-10-2023 மாலை 06.15 மணி முதல் 15-10-2023 அதிகாலை 05.20 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன் இல்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகள் பாராட்டப்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். துர்க்கை, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 09-11-2023 அதிகாலை 02.00 மணி முதல் 11-11-2023 பகல் 01.00 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். அஷ்டலட்சுமி வழிபாடு, சனி பகவானுக்கு விரதம் இருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 06-12-2023 காலை 10.20 மணி முதல் 08-12-2023 இரவு 09.53 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8 கிழமை – வெள்ளி, சனி திசை – மேற்கு
கல் – நீலக்கல் நிறம் – வெள்ளை, நீலம் தெய்வம் – ஐயப்பன்
மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

கம்பீரமான தோற்றமும், சிறப்பான உடல் அமைப்பும், உதவி செய்யக்கூடிய பண்பும் கொண்ட மீன ராசி நேயர்களே, நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசி அதிபதி குரு 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும், 22-04-2023 முதல் தன ஸ்தானமான 2-ல் சாதகமாக சஞ்சரிக்க இருப்பதால் முதல் மூன்று மாதங்கள் நீங்கள் சமாளித்து விட்டால் ஏப்ரலுக்கு பிறகு உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருக்கும்.
பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை ஏப்ரலுக்கு பிறகு மேற்கொண்டால் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு தற்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க கூடிய சனி வரும் 17-01-2023 முதல் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்குகிறது. இதன் காரணமாக வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களிலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தூரப் பயணங்களை தள்ளி வைப்பது குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்ப்பது நல்லது.
ஏழரைச் சனியின் காரணமாக எதிர்பாராத வகையில் கடன் வாங்க நேரிடும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, சக்திக்கு மீறி செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கடன் வாங்கக்கூடிய நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள், ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
தேவையற்ற நெருக்கடிகளை பொருளாதார ரீதியாக சந்திக்க நேர்ந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் அரங்கேறும். கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை நிலவும். அசையா சொத்துகளால் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் ஆதரவாக செயல்படுவார்கள்.
உத்தியோகம்
உங்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கான சன்மானம் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் பணியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் இருக்காது. வேலையாட்கள் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும் காலம் என்பதால் அனைத்து செயலிலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர் தொடர்புகளால் சிறு சிறு அனுகூலங்கள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
கொடுக்கல்- வாங்கல்
உடனிருப்பவர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்கு நிம்மதி குறையும் என்றாலும் பணவரவுகள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும், வலிமையும் கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அரசியல்
பெயர், புகழ் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது சாதித்து விடுவீர்கள். வீண் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.
கலைஞர்கள்
பணவரவுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன், நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும் என்றாலும் அதனால் சாதகபலனும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் உங்கள் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இடையூறுகள் ஏற்படும். பட்டபாட்டிற்கான முழு பலனை சிறு தடைக்கு பின்பு அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு, வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
பெண்கள்
உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
நீங்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்க முடியும். கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும் நேரம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். உடல்நல குறைபாட்டால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க நேரிடும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளின் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மாதப் பலன்கள்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய் 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டு உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில் ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் ஏற்படும். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 15-01-2023 காலை 06.48 மணி முதல் 17-01-2023 பகல் 01.00 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். சர்பேஸ்வரர் வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் – 11-02-2023 பகல் 01.02 மணி முதல் 13-02-2023 இரவு 08.37 மணி வரை.
மார்ச்.
ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். பெரிய முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள் விலகி பதவி உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்.
சந்திராஷ்டமம் – 10-03-2023 மாலை 06.35 மணி முதல் 13-03-2023 அதிகாலை 02.18 மணி வரை.
ஏப்ரல்.
ஜென்ம ராசிக்கு 1, 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடி இருந்தாலும் வரும் 22-ஆம் தேதி முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிர்பார்த்து காத்திருந்த நல்லசெய்தி ஒன்று கிடைக்கப் பெற்று மனநிறைவு தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும், லாபங்களும் தேடி வரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 07-04-2023 அதிகாலை 01.10 மணி முதல் 09-04-2023 காலை 08.01 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகி மகிழ்ச்சியை அளிக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். விநாயகர், அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 04-05-2023 காலை 09.20 மணி முதல் 06-05-2023 மாலை 03.22 மணி வரை மற்றும் 31-05-2023 மாலை 06.30 மணி முதல் 02-06-2023 இரவு 12.28 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ராகு 2-ல் உள்ளதால் கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதி உண்டாகும். கடன்கள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனையும், பைரவரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 28-06-2023 அதிகாலை 03.27 மணி முதல் 30-06-2023 காலை 10.20 மணி வரை.
ஜுலை.
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாத முற்பாதியில் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும், அம்மனையும் வழிபாடு செய்யும்.
சந்திராஷ்டமம் – 25-07-2023 பகல் 11.13 மணி முதல் 27-07-2023 இரவு 07.29 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, மாத முற்பாதியில் 6-ல் செவ்வாய், பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்களை பைசல் செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அம்மன் வழிபாடு, பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 21-08-2023 மாலை 05.30 மணி முதல் 24-08-2023 அதிகாலை 02.54 மணி வரை.
செப்டம்பர்.
குரு 2-ல், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வம்பு, வழக்குகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத ஊதிய உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முருகரையும், மகாலட்சுமியையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 17-09-2023 இரவு 11.08 மணி முதல் 20-09-2023 காலை 08.45 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொ-றுமையுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவன், முருகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-10-2023 அதிகாலை 05.20 மணி முதல் 17-10-2023 பகல் 02.20 மணி வரை.
நவம்பர்.
ஜென்ம ராசிக்கு 8, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும், முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குரு 2-ல் உள்ளதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழிலில் சாதகமான பலன்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். சிவனையும் முருகரையும் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 11-11-2023 பகல் 01.00 மணி முதல் 13-11-2023 இரவு 09.17 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமும், எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தைரியமும் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் எடுக்கும் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகளும் குறையும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் – 08-12-2023 இரவு 09.53 மணி முதல் 11-12-2023 காலை 06.10 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 கிழமை – வியாழன், ஞாயிறு திசை – வடகிழக்கு
கல் – புஷ்ப ராகம் நிறம் – மஞ்சள், சிவப்பு தெய்வம் – தட்சிணாமூர்த்தி


