சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எப்போதும் எனக்கு பிடிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பொருட்களுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார். இதனால் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தியது.
வரி உயர்வு காரணமாக இரு நாடுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அமெரிக்கா – சீனா இடையேயான வேறுபாடுகளை கலைவதற்கும், வரி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நியாயமாக தொடங்கவும், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாக கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எப்போதும் எனக்கு பிடிக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது’’ எனவும் தெரிவித்துள்ளார்.
