சட்டப்பேரவையில் இன்று 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம்.!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மீண்டும் நடைபெறுகிறது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள். இதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய், செய்தி மற்றும் விளம்பரம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர் கல்வித் தறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பதில் அளித்து உரையாற்றுவார்கள்.
நிறைவாக, இருவரும் துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *