
இந்த ப்ராக்ஸி வாக்கு முறைப்படி, நேரில் வந்து வாக்களிக்க முடியாத சூழலில், தனக்கு பதிலாக மற்றொருவர் வாக்களிக்க முடியும். இதுக்கு சில விதிமுறைகளும், கட்டுபாடுகளும் இருக்கு. இது பற்றிய விரிவான தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.
ப்ராக்ஸி வாக்க, பதிலாள் வாக்கு அல்லது பகர-ஆள் வாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் வாக்காளர் தனது வாக்குரிமையை இன்னொருவர் மூலம் செலுத்தலாம். இந்த பதிலாள் வாக்கு என்பது, ஒரு வாக்காளர் தன்னால் நேரில் வர முடியாத சூழலில், தமக்கு வேண்டிய ஒருவரைத் தனக்குப் பதிலாக வாக்களிக்க நியமிக்கும் முறையாகும்.
இந்த முறையில், ஒரு வாக்காளர் சட்டப்பூர்வமாக ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யும் அதிகாரத்தை வழங்குகிறார். இது ஜனநாயகத்தில் அனைவரின் பங்களிப்பையும் உறுதி செய்யும் ஒரு கருவியா இருந்தாலும், வாக்கின் ரகசியம் காக்கப்படுவதிலும், முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் கருதி பல நாடுகளில் இதற்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
அதிகாரப்பூர்வமான விண்ணப்பம் மற்றும் உரிய சரிபார்ப்புகளுக்குப் பிறகே ஒரு நபர் மற்றொருவருக்காகப் பதிலாள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்..
இது யார் யாருக்கு பொருந்தும்னு பார்த்தா,
1. தேர்தல் நாளில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், வெளிநாடுகளில் அரசு தூதரகப் பணியில் இருப்பவர்கள், அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் மற்றும் உடல்நலக்குறைவு காரணமா வாக்களிக்க முடியாதவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
2. இந்த பதிலாள் வாக்காளர், ஒரு வாக்காளருக்கு மட்டும் தான் வாக்களிக்க முடியும்.
3. பதிலாளரா நியமிக்கப்படுபவர் அதே தொகுதியில் வாக்காளராக இருக்கனும் அல்லது அந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
இதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளலாம்,,,,
1. இந்தியாவ பொறுத்தவரை வாக்காளர், தேர்தலுக்கு முன்னதாகவே Form 13F என்கிற குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து, தான் யாரைப் பதிலாளாக நியமிக்கிறேன் என்ற விவரத்தைச் சமர்ப்பிக்கனும்.
2. அந்த விண்ணப்பம் தேர்தல் நடத்தும் அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் ‘பதிலாள் வாக்காளர்’ என்ற குறிப்பு சேர்க்கப்படும். தேர்தல் நாளன்று, நியமிக்கப்பட்ட பதிலாள் தனது அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று, தான் யாருக்காக வந்திருக்கிறேன் என்ற விவரத்தைக் கூறி, அந்த வாக்காளருக்காகத் தனது நடு விரலில் மை வைத்து வாக்களிக்கலாம்.
3.ஒருமுறை நியமிக்கப்பட்ட பதிலாள், அந்த வாக்காளர் அந்தப் பதவியில் இருக்கும் வரை அல்லது அந்த நியமனத்தை ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும்.
இதுல நன்மைகளும் மற்றும் சவால்களும் இருக்கு……
நன்மை, கடமை நிமித்தமாகத் தொலைவில் இருப்பவர்களுக்கும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற இது ஒரு பாலமாக அமைகிறது.
சவால், இந்த முறையில் வாக்காளர் தனது வாக்கை யாருக்குச் செலுத்தச் சொன்னாரோ, அதே நபருக்குத்தான் பதிலாள் வாக்கு செலுத்தினாரா என்பதை உறுதி செய்வது கடினம். இதனால் இதில் முழுமையான ‘வாக்கு ரகசியம்’ பேணப்படுவதில்லை என்ற விமர்சனமும் உண்டு.
ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, முறையாகப் பதிவு செய்திருந்தால் இந்தப் பதிலாள் வாக்கு முறையைப் பயன்படுத்தலாம்.
சாதாரண பொதுமக்களுக்கு இந்தியாவில் இன்னும் பதிலாள் வாக்கு முறை அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் நேரில் சென்றோ அல்லது சில தகுதிகளுக்கு ஏற்ப தபால் வாக்கு மூலமாக மட்டுமே வாக்களிக்க முடியும்.



