டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க நாடளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு.!

சவுதி அரேபியாவுக்குப் போர் விமானத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்க உள்ளதால் அமெரிக்க நாடளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்தபோது சவுதி அரேபியாவுக்கு 48 எப்-35 போர் விமானத்தை விற்பனை செய்ய அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இதுகுறித்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் பேசியபோது, ‘‘சவுதி அரேபியாவுடனான எப்-35 போர் விமானத்தின் விற்பனையை தொடர விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, எப்-35 விமானத்தை ஏற்கனவே தனது நட்பு நாடுகள் உள்ளிட்ட 19 நாடுகளுக்கு அமெரிக்கா விற்றுள்ளது. எனவே, சவுதிக்கு எப்-35 போர் விமானத்தை தரும் பட்சத்தில் அதன் தொழில்நுட்பத்தை சீனா நேரடியாகவோ அல்லது ஹேக் செய்து மறைமுகமாகவோ கைப்பற்றக் கூடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அஞ்சுகிறது.

இதையடுத்து, அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, ஆயுத விற்பனை விவகாரங்களில் அதிபர் ஒப்புதல் அளித்தாலும் அதை நாடாளுமன்றத்தால் தடுத்து நிறுத்த முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை டிரம்புக்கு எதிராக முன்னெடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *