Advertisements

இந்தியாவில் தற்போது 76 முதல் 80 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாக உயர்ந்திருந்தாலும், அது நீண்ட காலத்திற்கு இதே உச்சத்தில் நீடிக்காது என்று தெரிவித்தார்.
உலகளாவிய போர்ப் பதற்றங்கள் மற்றும் கடல்வழித் தடைகளுக்கு இடையிலும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்படவில்லை என்று கூறினார். ஒருவேளை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருந்தாலும் கூட நமது நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்.பி.ஜி எரிவாயு இருப்பு இருக்க வேண்டும் என்பதே தனது அமைச்சகத்தின் கொள்கையாகும் என்று தெரிவித்தார்.
Advertisements


