chennai:வீடு புகுந்து துணை நடிகை பாலியல் பலாத்காரம்!

Advertisements

துணை நடிகை உறவினர், வேலை விஷயமாக ஐதராபாத் சென்று விட்டார்.

சென்னை:தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்,

இந்த நிலையில் அவரது உறவினர், வேலை விஷயமாக ஐதராபாத் சென்று விட்டார். இதனால் வீட்டில் துணை நடிகை மட்டும் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் 6 பேர் புகுந்தனர். அதில் முருகேசன் என்பவர் வெளியில் 2 பேரைக் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு துணை நடிகையை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் துணை நடிகை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் கைதான முருகேசன், திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருவதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *