Trichy Velusamy: செய்தியாளரின் கேள்விக்கு டென்ஷன்!

Advertisements

வாய் வார்த்தையில் போர்! செய்தியாளரின் கேள்விக்கு டென்ஷன் ஆன திருச்சி வேலுசாமி… செய்தியாளர் கேள்வியும் திருச்சி வேலுசாமியின் பதிலும்…

மனிதாபினம் இருந்தால் கர்நாடகா காவேரி நீரை வழங்கும் எனக் கூறுகிறீர்கள் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு மனிதாபிமானம் இல்லையா ?

அதற்குப் பதிலளித்த  திருச்சி வேலுசாமி நான் எப்போது சொன்னேன் கர்நாடகா அரசுக்கு மனிதாபிமானம் இல்லை என்று குதர்க்கமா கேள்வி கேக்காதீங்க, உங்களுக்கு அனுபவம் இல்லை, வரலாறை தெரிந்து விட்டு வந்து பேசுங்க எனக் கோபமாகப் பதிலளித்தார்.  மேலும் நீங்க எந்தப் பத்திரிக்கை,  அப்டின்னுதான் கேட்கணும் வேற என்ன கேக்க சொல்றீங்க எனவும் கூறினார்.

அதற்குக் கர்நாடகாவில் அணைத்து அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், போராட்டம் நடத்துகிறார்கள் தமிழகத்தில் அந்தத் தாக்கம் இல்லையேயெனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.


வாங்க போராடுவோம் சாகும் வரை உண்ணாவிரதம் நான் ரெடி நீங்க ரெடியா எனச் செய்தியாளரைப் போராட்டத்திற்கு அழைத்தார் திருச்சி வேலுசாமி… மேலும் ஜகா வாங்கிறீங்க பாத்தீங்களா நாங்க மட்டும் உண்ணாமல் சாவணும் நீங்க ஜாலியா இருக்கணும் எனவும் நக்கலடித்தார்.

இந்த வார்த்தை போர் தொடர மீண்டும் செய்தியாளர் காவேரியை வைத்துப் பாஜக காங்கிரஸ் என இரு கட்சிகளும் அரசியல் செய்கிறீர்கள் எனக் கேள்வியை எழுப்பினார்.

நீங்க அரசியல் பண்ணாம கேள்வி கேளுங்க, உள் நோக்கத்தோடு கேள்வி கேள்வி கேக்காதீங்க என்றும், என் பேரன் வயசுல இருந்துட்டு புத்தி இல்லாம கேள்வி கேக்கற, rss – ஆ நீயெனக் கோபத்தின் உச்சிக்கே சென்றார் திருச்சி வேலுசாமி.   பின்னர்    சீமான் மாதிரிப் பதில் சொன்னாதான் உங்களுக்குச் சரியா வரும் என  ஒரு வழியாகப் பேட்டியை முடித்துக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *