K. Selvaperunthagai: தமிழகத்தில் மோடியின் சித்து விளையாட்டு எடுபடாது!

Advertisements

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்ட போதும் வராத பிரதமர் மோடி தற்போது வாக்கு சேகரிக்க தமிழகம் வருகிறாரெனத் தமிழக காங்கிரஸ்தலைவர்செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

மறைந்த வசந்தகுமார் நினைவிடத்தில் மாலை அணிவித்து அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செல்வப் பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

திமுக காங்கிரஸ் வைத்திருக்கின்ற பணத்தை வெளியில் கொண்டு வந்து பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்குவேன் என்று மோடி கூறினார்.இதுவரைக்கும் கொடுக்கவில்லை.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்ட போதும் வராத பிரதமர் மோடி தற்போது வாக்கு சேகரிக்க தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மோடியின் சித்து விளையாட்டு எடுபடாது. மோடி குடும்பம் என்றால் அதானி குடும்பம்.

இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறி வேலைவாய்ப்பைப் பறித்தது, பெட்ரோல் டீசல் விலையைப் பாதியாகக் குறைப்பேன் என்று கூறி விலை ஏற்றியது, பண மதிப்பிழப்பை வைத்துச் சிறு தொழிலை அளித்தது, மொத்தத்தில் இந்தியாவை அழிப்பது தான் மோடி குடும்பமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிப் புதிதாக நாக்பூரில் தலைமை இடமாகக் கொண்டு புதிய சட்டத்தை இயற்ற முயன்று வருகிறார். தற்போது புதிதாக இந்திய கல்வித்துறையில் கை வைக்கிறார்.

தமிழகம் மட்டுமே சமூக நீதியில், சமத்துவ நிதியில் மேலோங்கி நிற்கிறது.எல்லா மாநிலங்களையும் அழித்ததைப் போல் தமிழகத்தையும் மோடி அழித்து விடுவார் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. அவருடைய இந்தப் பொய் பித்தலாட்டம் தமிழகத்தில் எடுபடாது.

ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசும் நபர்ஜி யூப்போப் மற்றும் கால்டுவெல் ஆகியோரைப் பற்றிப் பேசுவதற்கு ஆளுநருக்கு மோடிக்கும் தகுதியே கிடையாது. அவர்கள் இந்தியாவை சாராதவர்கள் தமிழையும் இந்தியாவையும் நேசித்தார்கள் ஆனால் மோடியால் இந்தியாவையும் ஆளுநரால் தமிழகத்தையும் நேசிக்க முடியவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் உள்ள மேற்கு வங்கத்தைச் சார்ந்த பகவான் தாஸ், தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று விலகுகிறார் அதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வர்தன் பொது வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதாகக் கூறியுள்ளார் இதுதான் பாஜகவின் நிலைமை.

திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது இப்போது இந்தியா முழுவதும் கூட்டணி ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. தமிழக புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்பதாக நினைத்து நாங்கள் வேலை செய்கிறோம்.

தமிழகத்தில் திமுக அழிந்து விடும் என்று சொன்ன தலைவர்கள் தான் இப்பொழுது மண்ணில் இல்லாமல் உள்ளனர் என்ன அவர் கூறினர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *