
ஒரு சாதாரண பிரச்சணையை கூட சரிசெய்ய இவர்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மன்றாட வேண்டியிருக்கிறது. காரணம் வேற சமூகத்தை சேர்ந்தவர், உபசரிக்கும், உச்சரிக்கும் முறை, உதாசிணப்படுத்துவது போன்ற எண்ணற்ற காரணங்களை அடுக்கலாம்.
சரி இவர்கள் கண்ணீர் மல்க கூறும் பிரச்சணைக்கு வரலாம். மாம்பழ மாவட்டம் என்று அழைக்கப்படும் தருமபுரியிலே, கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும், ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை அருகே மஞ்சக்குடும்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் போதிய இட வசதி இல்லாமலும், அடிப்படை வசதி கிடைக்காமல் அல்லோலப்பட்டு தங்கள் வாழ்நாளை தங்கள் குடும்பத்துடன் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பல தலைறைகளாக வனப்பகுதியைச் சார்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, வனத்துறை சார்பில் குடியிருப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டதாகவும், சில குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், சில குடும்பங்கள் தற்போது வரை பாமர பழங்குடியின ஏழை படும் அவல நிலை கண்டு சூரியன் வழக்கத்தைவிட சற்று சூடேரினால், மல மல வென எறிந்துவிடும் ஓலைக் குடிசைகளில் தங்கள் வாழ்விலும் முன்னேற்றம் வந்து விடாது என்று ஒவ்வொரு நாளையும் ஏங்கிக் கொண்டு அந்தக் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஒகேனக்கல் பகுதியில் பழங்குடியின் மக்களுக்கு நடக்கும் ஒரு அசாம்பாவிதம் மண்ணில் போட்டாலும், மக்குவதற்கு ஆகும் பல காலம் அதுதான் பிளாஸ்டிக் எனும் நெகிழிப் பைகள், அதனை மண்ணிற்கு ஆபத்து என்று எறியூட்டினாலும், மனிதனுக்கு ஆபத்து. நான் சொல்ற இந்த ரெண்டாவது ஆபத்துதான் பழங்குடியின மக்களுக்கு இப்ப பேராபத்தாக வந்து விளைந்திருக்கிறது. பக்கத்து ஊட்டுக்காரன் நம்ப ஊட்டு முன்னாடி குப்பையை கொட்டி தீ வைத்தாலும், நாம தீப் பொறியா பொங்குவோம். ஆனால் இங்கு பல குடிசைகள் இருக்கின்ற பகுதியில் தீ வைத்தால்.
அதுவும் மொத்த ஓகேனக்கல் ஊரோட பிளாஸ்டிக் கழிகளையும் இங்கு வந்து கொட்டினால் பழங்குடியின மக்களின் வயிறு எறிமா எறியாதா என்ன. அதனால் பொங்கி எழுந்த பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படும்போது, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறுவதால் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், ஒரு மனிதனுக்கு முக்கியம் மூன்று உணவு, உடை , இருப்பிடம், அந்த மூன்றில் மனிதன் ஒன்றை இழந்தாலும், மனிதன் தன் நிம்தியை இழப்பான்.
இங்கு இரவு நேரங்களில் அவர்களது இருப்பிடத்தில், தூங்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் தன் உள்ளக் கவலை குமறினர்.
மேலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும், அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தாலும், பாரதம் தான் இதுவரை எது என்று அறியாத பின்னால் வளர்ந்து வரும் இளம் நச்சதிரங்களாகிய அவர்களது குழந்தைகள் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதாகவும், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும் வேதனையுடன் மனம் நொந்து நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.
குப்பைகளுக்கு தீ வைக்கும்போது ஏற்படும் தீப்பொறிகள், தீ வைத்தவனை சுடாமல், அருகிலுள்ள ஓலைக் குடிசைகளில் விழுவதால், குடிசை வீடுகள் தீப்பிடிக்கும் அபாயமும் இருப்பதாக மலைவாழ் மக்கள் தன் நெஞ்சம் சுடும் படி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனிடையே, மனிதன் உயிர் வாழ்வதற்கு முதல் ஆதாரமான தங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர், போதுமானதாக இல்லை என்றும், வரும் தண்ணீர் பச்சை நிறத்திலும், துர்நாற்றத்துடனும் இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடியிருப்பு பகுதி முழுவதும் குப்பைக் கழிவுகளால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாகவும், இயற்கைக்கு ஏற்றாற்போல் தண்ணீரின் நிறம் மாறுவது போல், எங்கள் அவல நிலை கண்டு, எந்த அரசாங்கத்தின மனம் மாறாதோ, மாற்றம் ஏற்படாதோ என்று பழங்குடியின மக்கள் மனம் நொந்து அள்ளி வீசினம் தங்கள் உள்ளக்கிடங்கை. தமிழக மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் அரேங்கேற்றும், தமிழக அரசும், தர்மபுரி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அருகே குப்பைகள் கொட்டப்படுவதையும், தீ வைத்து எரிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
முறையான குப்பை மேலாண்மை, சுகாதாரமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் கூப்பாடு போட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், இதேநிலை தொடர்ந்து நீடித்தால், தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த வனப்பகுதிக்கே மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என மலைவாழ் மக்கள் வேதனையுடன் குமறினர்.
ஆக மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு இந்த பழங்கடியின் மக்களின் மனம் அறிந்து, அவர்கள் உள்ளக் கவலை அறிந்து, தமிழக அரசு மீது நம்பிக்கை வர, பழங்குடியின மக்களுக்கு நம் ஜெம் தொலைக்காட்சி அவர்களின் கவலை கருத்தை எடுத்துரைத்து மாற்றாத்தை உருவாக்க, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உருவாக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.




