Sivakasi : கண்ணில் மிளகாய்த்தூள்.. கழுத்தில் அரிவாள்..பெண்ணின் அதிர்ச்சி கொ*லை.!

Advertisements

தென்னாட்டு காந்தி, கர்மவீரர், ஏழைப் பங்காளன் போன்ற எண்ணற்ற பட்டங்களுக்கு சான்றான காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலே,  பட்டாசு தலைநகர் என்று அழைக்கப்படும் சிவகாசியிலே, பெண்ணால்  நேர்ந்த கொடூர கொலைக்கு பெண் பெயர் கொண்ட விஜயலட்சுமி காலனியிலே, வசித்து வருபவர் தூய தமிழ் பெயர் கொண்ட 38 வயதான மருதாயி என்பவர். இவரது மனம் கவர்ந்த கணவரான

சோனை முத்து விண்ணுலகம் சென்றதால்,  இவரது வாழ்க்கை இந்த இளம் வயதிலே  நிறை குடம் தழும்பியதற்கு சான்றானது. அவரது பாதி வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த சான்றுகள் அவர் பெற்ற இரண்டு முத்துக்கள். முதல் முத்தான முதல் பெண் மொட்டு கழுத்தில் மாலை யேறி திருமணமாகியும், 16 வயதானே இரண்டாவது ஆண் மொட்டும் உள்ளனர்.

இங்குதான் கதைக் களம் திரும்புகிறது. கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில்  அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி, திலகம் உள்ளிட்ட  தோழிகளுடன் இருந்தபோது 6 பேர்  கொண்ட கொடூரக் கும்பல் மருதாயி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன், ஈஸ்வரியை  கத்தியால் தலையில் தாக்கி அவர்களிடமிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க தோடு,

வெள்ளிக்கொலுசு, செல்போன்கள் மற்றும் 7- ஆயிரம் ரூபாய்  பணத்தையும் பறித்துவிட்டு  சிட்டாய் பறந்துவிட்டான் திருடன். ஐய்யோ அம்புட்டு பவனும் போச்சே என்று மருதாயி அலறியடித்தவாறு ஓடோ ஓடோடி இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்குப் பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இவர் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகாசி காளியம்மன் கோவில் பழைய தெருவைச் சேர்ந்த பாண்டியின் 26ஏ வயதான பெயரிலே தங்கத்தை  கொண்டிருக்கும் தங்க முனீஸ்வரன் தங்கத்தை திருடி இருப்பானோ என்ற சந்தேகத்திலும், இந்த தங்கத்துக்கு உடந்தையான 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சட்டத்தில் உள்ள ஒரு  சில ஓட்டையை பயன்படுத்தி, இந்த வழக்கில்  கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினில்  வெளிவந்த தங்க முனீஸ்வரன் சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்கிடையே ஜாமினில் வெளிவந்துள்ள தங்கமுனீஸ்வரன், தான் சிறையில் நான் பட்ட இன்னல்களுக்கும்,

சிக்கலுக்கும் காரணமான விஜயலட்சுமி காலனியிலுள்ள மருதாயியின் வீட்டிற்கு தினமும் சென்று அவரிடம் பிரச்சனை செய்து வந்ததுடன் அவருக்கு தப்பினிலே கொடிய தப்பான  பாலியல் ரீதியான தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதாயி, தங்க முனீஸ்வரனை தனது வீட்டிற்கு வரவழைத்து ஒரு கொலை நாடகத்தை அரேங்கேற்றியிருக்கிறார்.

தன்னை போட்டு தள்ள போகீறார்கள் என்று அறியாமல், தங்க முனீஸ்வரன் மருதாயி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் நுழைவு வாயிலேயே  அவரது கண்களிலே காஷ்மீரி மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். இதன் காரணமாக நிலைதடுமாறிய தங்க முனீஸ்வரனின் கழுத்தில்,  மருதாயி  சலார் சலார் என்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே தங்க முனீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த திடுக்கிடும் கொலை சம்பவத்தின் தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலமையிலான போலீசார்  தங்க முனீஸ்வரனின் உடலை  கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்குப் பகுதி காவல் நிலையப்  போலீசார் மருதாயி, அவரது மகன் மற்றும் உறவுக்காரப் பெண்ணான  மதுரை மாவட்டம் வில்லூரைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸ் வாகனம் மூலமாக சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த  இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாவம் அவளும் பெண் தானே எவ்வளவுதான் பொறுப்பாள் அதுதான் பொங்கி  எழுந்துவிட்டாள், தன்னை கொள்ள வந்தவனையும், பாலியல் செய்தவனையும் போட்டு தள்ளிவிட்டாள்.

இந்த போட்டு தள்ளிய கதை பற்றி உங்கள் கருத்தை நம் ஜெம் கமென்ட்ல் பகிரவும் .இதுபோன்று குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியிலே ஒரு பெண்ணுக்கு நடந்த அசிங்கத்தை, சிங்கமாய் நின்று கர்ஜித்து அவனை கொலை செய்த பெண்ணுக்கு சட்டம், கொள்ளையனுக்கு ஜாமின் வழங்கியதுபோல். அந்த பெண்ணுக்கு ஜாமின் வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *