
தமிழக அரசியலில் தற்போது பரந்தூர் விமான நிலைய விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது, திட்டம் தேவைதானா, விவசாயிகளின் எதிர்ப்பை அரசு எப்படி கையாள வேண்டும் என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அப்போது திமுக மற்றும் தவெக தரப்பினரிடையே நடந்த கடுமையான வார்த்தைப் போர், தற்போது லீமா ரோஸ் – தங்கம் தென்னரசு மோதல் என்ற புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டின் மின்சாரத் துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் சில விமர்சனங்களை முன்வைத்தார். விமான நிலையத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாருக்காக பேசுகிறார்கள் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சின்போது “G Square மாப்பிள்ளை” என்ற வார்த்தை இடம்பெற்றது. இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குடும்பதில் ஒருவரான அதாவது மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை மறைமுகமாக குறிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்மல் குமாரின் இந்த விமர்சனத்திற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான பதில் வந்தது. அப்போது திமுகவினர் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சலிட்டதால், காண்டான அமைச்சர் நிர்மல் எல்லாத்துக்கம் எழுந்திரிச்சு நிற்பதற்கு இது ஒன்னும் பிடி பிரியடு கிடையாது என்று, மேலும் திமுகவினர் கூச்சலிட்டனர். ஒரு வழியாக பேசு வந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “G Square மாப்பிள்ளை” என்று பேசுகிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக “லாட்டரி மருமகன்” குறித்து நாங்களும் பேசலாமா என்ற தொனியில் பதிலடி கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்கனவே பரந்தூர் விவகாரத்தைச் சுற்றி இருந்த அரசியல் மோதல், தனிப்பட்ட குடும்பங்களைப் பற்றிய விவாதமாக மாறியது.
இந்த “லாட்டரி மருமகன்” என்ற வார்த்தைதான் அடுத்ததாக அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸை நேரடியாக களத்தில் இறங்க வைத்தது. தங்கம் தென்னரசுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த லீமா ரோஸ், தனது கணவரை அரசியல் விவாதத்திற்குள் தேவையில்லாமல் இழுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலில் கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் இருக்கலாம் என்றும், ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம் என்றும் கூறிய அவர், ஆனால் அந்த அரசியல் விவாதத்தில் குடும்ப உறுப்பினர்களை தேவையில்லாமல் இழுப்பது சரியல்ல என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார். குறிப்பாக, “யார் எந்த கேள்வியை கேட்டார்களோ, அதற்கேற்ற பதிலை மட்டும் அளியுங்கள்; என் கணவரை இதில் இழுக்க வேண்டாம்” என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.
தனது கணவர் லாட்டரி தொழிலுடன் தொடர்புடையவர் என்பதை லீமா ரோஸ் மறைக்கவில்லை. ஆனால் அந்தத் தொழில் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதாக அவர் விளக்கம் அளித்தார். தொழில் தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையாக செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, லாட்டரி தொழிலை அரசியல் விமர்சனத்திற்கான ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்பதே அவரது எதிர்ப்பாக இருந்தது.
மேலும், தனது குடும்பத்தினர் மீது அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது உண்மையான விவரங்களுடன் பேச வேண்டும் என்றும் லீமா ரோஸ் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது கணவரின் தொழிலை வைத்து அவரை அரசியலுடன் தொடர்புபடுத்துவது தேவையற்றது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான பெயர் ஆதவ் அர்ஜுனா.
லீமா ரோஸின் மருமகனான ஆதவ் அர்ஜுனா, முன்பு லாட்டரி தொழிலுடன் தொடர்புடையவராக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொழிலில் இருந்து விலகிவிட்டதாக லீமா ரோஸ் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஒரு அரசியல் பேச்சில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வார்த்தைகள் தமிழக அரசியலில் பெரிய விவாதத்தை உருவாக்கின. ஒருபுறம் “G Square மாப்பிள்ளை”, மறுபுறம் “லாட்டரி மருமகன்”.
இந்த இரண்டு வார்த்தைகளும் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தின் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்தன.உண்மையில், இந்த விவகாரத்தின் அடிப்படை பிரச்சினை பரந்தூர் விமான நிலையத் திட்டம்தான். விமான நிலையம் அமைக்கப்பட்டால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விமானப் போக்குவரத்துக்கு பலன் கிடைக்கும் என்று அரசு தரப்பு வாதிடுகிறது. அதே நேரத்தில், திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த அரசியல் விவாதத்தில் தவெக தரப்பு திமுகவை விமர்சித்தது. அதற்கு திமுக தரப்பும் பதிலடி கொடுத்தது. ஆனால் பதிலடியில் தனிப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் மற்றும் தொழில்கள் பேசப்பட்டதால் விவகாரம் வேறு பாதைக்கு சென்றது.
இதைத்தான் லீமா ரோஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். “அரசியல் என்பது அரசியல் ரீதியாக இருக்கட்டும்; குடும்பத்தை இதில் இழுக்க வேண்டாம்” என்பதே அவரது பேச்சின் மையமாக இருந்தது.
இதனால் தங்கம் தென்னரசுவின் பதில் குறித்து அதிமுக தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் திமுக தரப்பு, தவெக தரப்பிலிருந்து வந்த விமர்சனத்திற்கு அரசியல் பதிலடியாகவே இந்த கருத்து முன்வைக்கப்பட்டதாக பார்க்கிறது. இவ்வாறு பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தொடங்கிய மோதல், தவெக–திமுக வார்த்தைப் போருக்கு மாறி, பின்னர் லீமா ரோஸ் vs தங்கம் தென்னரசு என்ற புதிய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
ஒரு விமான நிலையத் திட்டத்தைப் பற்றிய விவாதம், எப்படி அரசியல் தலைவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தொழில்கள் வரை சென்றது என்பதுதான் இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.இப்போது எழும் முக்கியமான கேள்வி ஒன்றுதான்: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான அரசியல் விவாதம் இனி கொள்கை மற்றும் வளர்ச்சி குறித்த விவாதமாக தொடருமா? அல்லது இதுபோன்ற தனிப்பட்ட அரசியல் வார்த்தைப் போராக மாறுமா?
லீமா ரோஸ் தனது கணவரை அரசியலில் இழுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், தங்கம் தென்னரசு தரப்பில் இருந்து இதற்கு மேலும் ஏதேனும் பதில் வருமா என்பதும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் “G Square மாப்பிள்ளை” முதல் “லாட்டரி மருமகன்” வரை சென்ற இந்த வார்த்தைப் போர், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அடுத்த அரசியல் சர்ச்சைக்கு அடித்தளம் அமைத்துள்ளது..!



