
நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 21 பேர் காத்மண்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 21 பேர் அங்கிருந்து தலைநகர் காத்மண்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா சென்று நலம் விசாரித்தார். 21 பேரும் காத்மண்டில் இருந்து இந்தியா திரும்புவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுத் தமிழகத்துக்கு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சர்கள் நால்வரைத் தில்லிக்கு அனுப்பியுள்ளார்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய நால்வரும் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உதவி மையம் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.




