இருமுடி திரைப்படத்தில் ரவி தேஜாவின் நடிப்பு அற்புதம் : சிரஞ்சீவி புகழாரம்.!

Advertisements

இருமுடி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை ரவி தேஜா வெளிப்படுத்தியுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இருமுடி’. இப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். வெளியானது முதலே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே மிக வேகமாக 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தை பாராட்டி நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இருமுடி’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ரவி தேஜாவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அற்புதமான நடிப்பை ரவி தேஜா வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.  இயக்குநர் சிவா நிர்வாணா, இவ்வளவு ஆழத்துடனும் உணர்ச்சியுடனும் படத்தை வழங்கியதன் மூலம் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு படத்தின் வெற்றி என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் உரியது என்றும் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *