Advertisements

தமிழகத்தின் பிரபலமான போத்தீஸ் ஜவுளி கடை நிறுவனம் தொடர்பாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் 10 கிலோ தங்கம் 18 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் . தமிழகத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் ஒன்றாக திகழ்கிறது போத்தீஸ் நிறுவனம் இந்த நிறுவனம் கடந்த 1977 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது .
கேவிபி சடையாண்டி போத்தி மூப்பனார் என்பவர் இதனை தொடங்கினார். தற்பொழுது 98 ஆண்டுகள் கடந்த பிறகு பல கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனம் நான்கு தலைமுறைகளை கடந்துள்ளது . போத்தீஸ் மூப்பனார் குடும்பத்தினர் அனைத்து கடைகளையும் முன்நின்று நடத்தி வருகிறார்கள் .
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக போத்தீஸ் உரிமையாளரின் இரண்டு மகன்கள் வசிக்கும் இசிஆர் ரோட்டில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்
12 அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 18 கோடியே 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது இது தவிர பல கோடி ரூபாய் அளவில் வருமான வரி மோசடி செய்ததாகவும் தெரியவந்துள்ளது . இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி ஜவுளி நிறுவனங்கள் மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் போத்தீஸ் ரெய்டு குறித்து அதிர்ச்சியில் ஆழ்துள்ளனர்.
Advertisements



