
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்கக் கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்கக் கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் :
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நடைபெற்ற இக்கூட்டத்தில் , தமிழ்நாடு , கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
2.5 டி.எம்.சி திறக்க உத்தரவு:
அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழுப் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து 2.5 டி.எம்.சி நீரை திறக்கக் கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


