தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி! ரூ.351 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ₹351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50 சதவீதமான ரூ.351 கோடியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது.

2023-24-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கபட்டுள்ளது. அதில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பும் செய்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *