Middle East Crisis : உலகளவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் : ஐ.நா. சபை.!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது சமூக வலைத் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து, அனைத்துத் தரப்பினரும் போர் பதற்றத்தை தணித்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *