
சென்னை:
சென்னையில் போலீஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி காவலரிடம் உதவி கேட்டபோது, பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 13 வயது சிறுமி ஒருவர், தனது நண்பரைச் சந்திக்க வந்தபோது, பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார்.
அவருக்குப் பாதுகாப்பு அளித்து உதவ வேண்டிய, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், சிறுமியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் போலீஸ் பூத்தில் வைத்து அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியை வீட்டில் இறக்கி விடக் காவலர் வாகனத்தில் அழைத்துச் சென்றபோதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணையில், 16 வயது சிறுவனும் அந்தச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தச் சிறுவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
