கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் -முத்தரசன்!

Advertisements

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்கள் அனைத்தையும் வரும் ஏப்ரல் 28-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் இருக்கக் கூடாது என்பதும், அப்படி இருந்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும்.

தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது நல அமைப்புகளின் ஜனநாயக செயல்பாடுகளை உறுதி செய்ய, மதுரைக் கிளை நீதிமன்ற உத்தரவின் மீது தமிழக அரசு மேல்முறையீடு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாகச் சிறப்புச் சட்டம் நிறைவேற்றிக் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நிலை நாட்ட வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *