
இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தைத் தொடங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைத் தாண்டிய வர்த்தகம் தற்போது, இந்தியாவிற்கு வந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான பேச்சுவாா்த்தையின் போது கொள்கை அளவில் ஒப்புதல் நடைபெற்றதாக இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதில் இந்திய எல்லைப் பகுதியான இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தையும், இரு நாடுகள் இடையே விமான போக்குவரத்து சேவைகளையும் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
மேலும் கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் தொடங்க உள்ளதாகத் தகவல் தெரிவித்தனர்.


