ஸ்டாலின் வருகையால் பீகார் முன்னேறி விடுமா? – பிரசாந்த் கிஷோர் கேள்வி

Advertisements

தமிழக முதல்வர் வருகையால் பீகார் முன்னேறி விடுமா? என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்துகின்றார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருகின்ற 27 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கின்றார்.

இந்நிலையில், இது குறித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது தமிழக முதல்வர் ஒரு வேளை பீகார் வருகிறார் என்றால் இதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் கூறியதில், பீகாருக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற யாத்திரை தான் தற்போது வேண்டும். உபயோகம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *