Todays Gold Rate: ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை!

Advertisements

தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6235-க்கும் விற்பனையாகிறது. சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குவதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.49,880-க்கும் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,235-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குவதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *