ECR Accident: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது கார் பின்னால் மோதியதில், பைக்கில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளனர்.

கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. ஆந்திர பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *