Actor Vishal:உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்!

சென்னை: ”சில உப்புமா கம்பெனிகள் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பயன்படுத்திக்கொண்டு தப்பித்துவிடுகின்றனர். யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

முழுக்கு
நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: 80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும்; பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை.

தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள். தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கூடாது. சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி போட்டோஷூட் எடுத்து, பெண்ணை பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *