Tamilnadu : அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் : வானிலை மையம் அறிவிப்பு.!

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, ஓரிரு இடங்களில் 50-கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *