மதத்தையும், ஜாதியையும் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வந்துள்ளேன் – அண்ணாமலை.!

மதத்தையும், ஜாதியையும் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வந்துள்ளேன், மதத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநாட்டில், வி.தி.லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பொள்ளாச்சியில், முதன் முறையாக வி.தி.லீடர்ஸ் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். மாநாட்டில், வி.தி.லீடர்ஸ்  அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழகம் தடுமாறும் நாம்தான் தாங்கிபிடிக்க வேண்டும் என்றும், 2026-ல் த.வெ.க.ஆட்சி, 2031-ல் வி.தி.லீடர்ஸ் அமைப்பு கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைக்கும், அரசியல் கட்சியாக மாறும் என்றும், மதத்தையும், ஜாதியையும் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வந்துள்ளேன் என்றும், மதத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், நான் தேசியவாதி, முதலில் நான் இந்து, இரண்டாவது நான் தமிழன் என்றும், ஒருபோதும் அற்ப அரசியலில் ஈடுபட மாட்டோம் என்றும் ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *