மேஷம்

மேஷ ராசி காரர்களே நடத்தை மற்றும் ஆளுமை செவ்வாய் கிரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நீங்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருபீர்கள். உங்கள் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றிக் காண்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஏதாவது ஒன்றை சாதிக்க நினைப்பீர்கள். இன்று அனுமாரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 6.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே. இந்த ராசிக்குரியவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக நிலையான முடிவுகளை விரும்புவார்கள். நீங்கள் யோசிக்காமல், ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதில் ஈடுபடுவது நல்லது.இது உங்களுக்கு மேலும் நற்பெயரை ஏற்படுத்தக்கூடும். தூரத்து செய்து ஒன்று நன்மையாக அமையும். இந்த சிவபெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே புத்திசாலிகளாகவும், இயற்கையிலேயே கலகலப்பானவர்களாகவும் இருப்பீர்கள் எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ள இவர்கள், தங்களின் செயல்களுக்கு பாராட்டுகளைப் பெறுவீர்கள் கூட்டத்தில் தனித்து நிற்பதே உங்களின் தனிச்சிறப்பு.. மேலும் இன்று உறவினர்களால் லாபம் உண்டு. இன்றைய நரசிம்மரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 5.
கடகம்

கடக ராசிக்காரர்களே இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் மிகவும் ஆழமான பிணைப்பை கொண்டிருப்பீர்கள் உங்களுக்கு இயற்கையிலேயே உணர்திறன் அதிகம். அதனால் எளிதில் உணர்ச்சி வசப் படுவீர்கள் கோபம் அவர்களின் முரட்டுத்தனமான பக்கத்தை வெளிப்படுத்தும். நிதானம் அவசியம். தியானம் ஒன்றே மன அமைதிக்கு வழி. மேலும் என்று பிரித்திங்கரா தேவி வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 1.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் பொதுவாக வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்பு கொண்டவர்கள். மிகவும் நம்பிக்கையும், லட்சியமும் கொண்டவர்கள். அவர்கள் தங்களது பணியை மிகுந்த விடாமுயற்சியுடன் செய்வீர்கள் யாருக்கும் வெறுப்புத்தன்மையை உண்டாக்க மாட்டீர்கள். மேலும் என்று உங்களுக்கு உறவினர்களால் லாபம் உண்டு. பணவரவில் குறை இருக்காது. இன்று வாராகி வணங்கி வர இனிதான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 4.
கன்னி

கன்னி ராசிக்காரர்களே நடத்தை மற்றும் ஆளுமையில் சிறந்தவர்களாக இருப்பீர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கடின உழைப்பாளி மற்றும் புத்திசாலியாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு தேவை ஏற்படும் நேரங்களில் நீங்கள் உதவ சற்றும் தயங்கமாட்டார்கள். எந்தவித கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் வெளியே வருவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள். மேலும் இன்று நரசிம்மரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.
துலாம்

துலா ராசிக்காரர்களே சமநிலை காத்தல் என்பது உங்கள் இயல்பு. பாரபட்சமின்மையின்றி நடக்கக் கூடியவர்கள். எதிலும் நியாயம் பேசுதல் உங்களது இயல்பு. நடுநிலையாக நடக்கக் கூடியவர்கள். நீங்கள் அணிந்திருக்கும் துணியில் சிறு கறை இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இன்று பெருமாளை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். மேலும் என்று சீனிவாச பெருமாளை வணங்கி வர எளிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.
தனுசு

விருச்சிக ராசிக்காரர்களே புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். குடும்பத்
துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மேலும் இன்று நரசிம்மரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 6.
மகரம்

மகர ராசிக்காரர்களே அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம் விட்டு பேசி நல்ல முடிவு எடுப்பீர். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மேலும் இன்று பத்மாவதி தாயாரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களே மனக் குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுப்படுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு உண்டு. இன்றைய தினம் தனப் பிரார்த்தி உண்டு. உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். மேலும் என்று துர்க்கையை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண்.2.
மீனம்

மீன ராசிக்காரர்களே ஆடை, அணிகலன் சேரும். மகள், மகனின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும். எதிர்பாராத நல்ல செய்தி தேடி வரும். குழந்தைகளால் அனுகூலம் உண்டு. மேலும் என்று கணக்குதிருகையை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 9.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
