Today rasipalan:இன்றைய ராசிபலன்:10/08/2024.

Advertisements

மேஷம்


நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அவர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களைப் பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். அதற்கு முயற்சி செய்வர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்


ஒற்றை தலைவலி வந்து போகும். பெரிய அளவில் பிரச்சினை இல்லை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். தந்தைவழி சொத்துக் கைக்கு வரும்.பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்


குடும்பத் தலைவிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவர். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்


அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக்கூடும். உடல்நிலையில் மூட்டுகளில் ஆங்காங்கே வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்


தம்பதிகளிடம் சிறுசிறு கருத்து மோதல்கள் உண்டாகும். பின்பு அவை சமாதானமாகும்.பாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கன்னி


புதிய நண்பர்கள் அறிமுகமாவர். அவர்களால் தங்களுக்கு மிகப் பெரிய வி.ஐ.பிக்களின் தொடர்புகள் கிடைக்கும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

துலாம்


திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரண் கிட்டும். தொழிலதிபர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். நினைத்த காரியம் வெற்றி பெறும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்


சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு கவுரவ பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் எதிர்காலம்குறித்த கவலைகள் தீரும். வழக்கறிஞர்களுக்குத் தங்கள் வழக்கில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு


தங்கள் முயற்சியின் பேரில் வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். ஒருமுறைப் படித்தாலே மனதில் பதியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

மகரம்


அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கும்பம்


தங்கள் முயற்சியின் பேரில் வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். ஒருமுறைப் படித்தாலே மனதில் பதியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. மருத்துவ செலவிற்கு இடம் உண்டு. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

மீனம்


கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசிச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *