
மேஷம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் சவாலான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரும். அணைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்படட வாய்ப்புள்ளது.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. உங்களுக்கு ஏற்றச் சூழ்நிலை நிலவாது. பணியிடத்தில் அதிகமான பணிகள் காணப்படும். துணையுடன் நட்பாக நடந்து கொள்வது நல்லது. நாளை நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. மேலும், பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் தலைவலி அல்லது முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் எதிர்மறையாக நடந்து கொள்வீர்கள். பணபுழக்கம் அதிகமாக இருக்கும். எதிர்ப்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிகப் பணிகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் பொறுமையாகப் பேசுவது நல்லது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும். மேலும், கூடுதல் செலவுகளும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பாக ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு யோசித்து செய்ய வேண்டும். பணியிடத்தில் பல தடைகள் ஏற்ப்படும். மேலும், சக பணியாளர்களுடனான பேச்சு வார்த்தைகளும் முறையாக இருக்காது. துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புளள்து.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். மேலும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். துணையுடன் அன்பான நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கிறது. மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். மேலும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியை மகிழ்ந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். பணியிடத்தில் நல்ல முறையில் பணியாற்ற அதிக கவனம் தேவை. துணையுடன் அகந்தை போக்கைத் தவிர்க்க வேண்டும். கூடுதல் செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது.நீங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனைக் கடினமாக உணருவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை சாதகமாக இருக்காது. ஆரோக்கியத்தில் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான.வாய்ப்புள்ளது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நட்பாக நடந்து கொள்வது நல்லது. நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும், நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுறுசுறுப்பான நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் சகஜமாக நடந்துகொள்வது நல்லது. பணப்புழக்கம் அபரிமிதமாகக் காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்தக் கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளைச் சந்திப்போம் நன்றி வணக்கம்.