Advertisements

மேஷம்

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. பொறுமை இழந்து காணப்படுவீர்கள். ஏமாற்றத்தை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால் பணிகளை திட்டமிட்டு கவனமுடன் ஆற்ற வேண்டும். மேலும் பணிகளை திறமையாக கையாள வேண்டும்.இன்று நீங்கள் சிறிய விஷயங்களைப் கூட பெரிதாக எடுத்துக்கொள்வீர்கள். உங்கள் துணையுடன் அனுசரித்து யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும்.உங்களின் அஜாக்கிரதை காரணமாக பயணத்தின்போது பண இழப்புகள் நேரலாம். அதனால் கவனமுடன் இருக்க வேண்டும்.செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை காணப்படும். உங்கள் திறமை மீது நம்பிக்கை ஏற்படும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் திருப்திக்கேற்ப பணியாற்றி அவர்களின் கவனத்தை கவர்வீர்கள்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.இன்று எதிர்பாராத பண வரவு காணப்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் நிறைவான திருப்தி கிடைக்கும்.இன்று அனுசரனையான மன நிலை காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை இருக்காது.
மிதுனம்

இன்று பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றி காணலாம். உங்களிடம் நிலையான தன்மை இல்லாத காரணத்தால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் பணிகளில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை நகைச்சுவையாக வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் இருவரிடையே அன்பு அதிகரிக்கும்.இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமிருக்கும். சேமிக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. மாறுபடும் சூழ்நிலைக் கேற்றவாறு அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.அதனை கட்டாயமாக நீங்கள் மீட்டமைக்க வேண்டும்.இன்று பணிகள் பரபரப்பாக காணப்படும். கூடுதலான பணிகளுக்கு நேரம் செலவாகும்.இதனால் மனதில் பய உணர்வு ஏற்படும்.உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படாது. உங்கள் துணையுடன் முறையான தகவல் பரிமாற்றம் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம்.இன்று பண வளர்ச்சிக்கான அதிர்ஷ்டம் குறைவு. பணப்பற்றாக்குறை காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.உங்கள் தாய்க்கு சிறிய அளவிலான உடல் நல பாதிப்பு ஏற்படும். இதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
சிம்மம்

இன்று காணப்படும் வேற்றுமைகளை தீர்க்க நீங்கள் பக்குவமான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். மாறுபடும் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.உங்கள் பணியில் சில போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.பணிச்சுமை காரணமாக இன்று நீங்கள் வருத்ததுடன் காணப்படுவீர்கள்.உங்கள் துணையிடம் உங்கள் மனதின் ஏமாற்றத்தை வெளிபடுத்துவீர்கள். இதனை தவிர்ப்பது நலம்.பண வரவு குறைந்து காணப்படும். பணத்தை கவனமாக கையாளவேண்டியது அவசியம்.கண்களில் எரிச்சல் ஏற்படலாம். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.
கன்னி

இன்றைய தினம் சிறப்பாக அமைய நீங்கள் திட்டமிட வேண்டும். எடுக்கும் முடிவுகள் சரியானதாயிருக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நன்று. பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படலாம். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.உங்கள் துணையிடம் உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்த முனைவீர்கள். உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதனை தவிர்த்தல் நலம்.இன்று கூடுதல் செலவுகள் ஏற்படக் காண்பீர்கள். இன்று பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.பற்களில் உபாதைகள் ஏற்படும் என்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்

இன்று உங்களுக்கு இனிமையான நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். கடினமான பணிகளும் எளிதில் முடிக்க யலும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.பணியில் உங்கள் செயல் திறன் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். நீங்கள் இன்று தரமான பணிகளை வழங்குவீர்கள்.உங்கள் துணையிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படும்.இன்று உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும். சில எதிர்பாராத பண வரவு காணப்படும்.உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக இன்று முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம்

இன்று வளமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடனும் அமைதியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் முக்கியமான இலட்சியங்கள் இன்று நிறைவேறும்.உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். உங்கள் செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள். இருவரிடையே அன்பு அதிகரிக்கும்.இன்று தேவையை விட அதிகமாக பணம் காணப்படும். சேமிக்கும் ஆற்றல் அதிகரித்து காணப்படும். மேலும் உங்களின் சேமிப்பை பராமரிப்பீர்கள்.உங்களிடம் அதிக ஆற்றலும் திடமும் காணப்படும். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தனுசு

இன்று நிச்சயமற்ற தன்மை காணப்படும். நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். இன்றைய நாள் வெற்றிகரமாக அமைய பொறுமை அவசியம்.பணியில் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக பணிகளை ஆற்ற வேண்டும்.உங்கள் துணையுடன் கலகலப்பாக பழகுங்கள். இன்று உங்கள் பிரியமானவரின் பேச்சை உன்னிப்பாக கேட்க வேண்டியது அவசியம்.கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி பாதுகாப்பு கருதி சேமிக்க வேண்டியது அவசியம்.நீங்கள் உங்களை அதிகமாக வருத்திக் கொள்ளாதீர்கள். இதனால் முதுகுவலி ஏற்படும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.
மகரம்

வெளியிடங்களுக்கு சென்று இன்றைய தினத்தை மகிழ்ச்சியான நாளாக்குங்கள். இன்று உணர்ச்சிவசப்படாமால் யதார்த்தமாக அணுகுங்கள். அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.பணிச் சூழல் முன்னேற்றகரமானதாக காணப்படாது. தவறுகள் நேராத வகையில் உங்கள் பணிகளை மேம்படுத்த வேண்டும்.இன்று உங்களிடம் காணப்படும் மாறுபடும் மனநிலை காரணமாக உங்கள் துணையிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தமாட்டீர்கள். உங்கள் துணையிடம் கலகலப்பாக பழகுங்கள்.இன்று செலவுகள் அதிகரித்து காணப்படும். தேவையற்ற செலவினங்கள் ஏற்படும். எனவே செலவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.அசௌகரியம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் குறையும். தொண்டைப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
கும்பம்

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதியும் தைரியமும் நிறைந்து காணப்படும்.உங்கள் சக பணியாளர்களுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள்.உங்கள் துணையுடன் அன்யோன்யம் காணப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள்.உங்கள் நிதியைப் பொறுத்த வரையில் சௌகரியமான நிலை இருக்கும்.உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும்.இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். தெய்வத்தின் அருளால் இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள். இது உங்களை ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
மீனம்

இன்று அனைத்தும் சிறப்பாக காணப்படும். உங்களிடம் காணப்படும் நம்பிக்கை வெற்றியின் உச்சத்தை தொட உங்களுக்கு வழிகாட்டும்.உங்கள் பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்களிடம் மறைந்து காணப்படும் திறமைகளை கண்டெடுத்து வெளிக்கொணர்வீர்கள்.உங்கள் துணையிடம் அதிக அளவு அன்பும் அக்கறையும் செலுத்துவீர்கள். நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்தில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.இன்று போதிய அளவு பணம் காணப்படும்.நிதியைப் பொறுத்தவரையில் சுதந்திரமான நிலை இருக்கும். திருதிகரமான மனநிலை காணப்படும்.இன்று ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். உங்களிடம் காணப்படும் உறுதியும் ஆற்றலும் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைக்கும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements


