Nithya Menen: ஆண்கள் தான் பாவம்.. ஓப்பனாகப் பேசிய நித்யா மேனன்!

பெண்களின் அழுகை குறித்து நடிகை நித்யா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகத் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 2008-ம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு குவிய தொடங்கியது.

2011-ம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் ஓ.கேக்கண்மணி, மெர்சல், 24 உள்ளிட்ட படங்களின் மூலம் நித்யா மேனன் பிரபலமானார்.

நித்யா மேனன் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு பல தரப்பினராலும் பாரட்டப்பட்டது.

இவரைப் போல் தங்களுக்கு ஒரு தோழி இல்லையே என்று ரசிகர்கள் ஏங்கும் அலவுக்கு ஷோபனா கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நித்யா மேனன்.

நித்யா மேனன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பெண்கள் அழுவது அவர்களின் பலமா அல்லது பலவீனமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்“ பெண்களுக்கு அழுகை என்பது நிச்சயம் ஒரு ஆயுதம்.

ஆனால் ஆண்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.ஏனெனில் மிக எளிதில் அவர்கள் அழமாட்டார்கள். சிறுவயதிலேயே ஆண்கள் அழக் கூடாது என்று சொல்லி வளர்க்கப்படுகின்றனர்.

பொதுவாக அழுகை என்பது மிகச்சிறந்த மருந்து. இதன் மூலம் உங்கள் வலிகள் குறையும். ஒரு பிரச்சனை ஏற்படும் அழுது முடித்து விட்டால் உங்கள் பாரம் இறங்கிவிடும். அது உங்களை வலிமையாக்கும்.அடுத்த வேலையை நோக்கி நீங்கள் நகர்ந்து செல்லலாம்.

என்னைப் பொறுத்தவரை வயதாகும்போது பிரச்சனைக்காக நாம் கவலைப்படும் நேரம் குறையும். இப்போதேல்லாம் நான் சீக்கிரமாகவே எனது கஷ்டத்திலிருந்து வெளியா வந்து விடுகிறேன். ஆண்கள் அவ்வளவு எளிதாக அழமாட்டார்கள். எனவே அவர்கள் மிகவும் பாவம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *