Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 18.01.2024

Advertisements

மேஷம்

 

மேஷ ராசி அன்பர்களே வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பெண்களால் நன்மை உண்டாகும் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். கணவன் மனைவிக்கிடையே அன்னோனியம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் சாதகமான உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆசை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் குறையும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்கள சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாஸ்திர சடங்குகளை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் வழியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்காளி வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கடகம்

 

கடக ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக் காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். .  உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். இன்று நீங்கள் வெங்கடாசலபதியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசி அன்பர்களே மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூரிலிருந்து புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

கன்னி

 

ராசி அன்பர்களே ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த பாடு நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். புண்ணிய தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். இன்று நீங்கள் அம்பிகையை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

 

துலாம்

 

துலாம் ராசி அன்பர்களே சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். பணவரவு கணிசமாக உயரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகையிலும் முன்னேற்றம் தரும் நாளாக அமையும். என்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு வர இனிமையான நாளாக அமையும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி அன்பர்களே பொறுமையை கடைப்பிடிக்கவும். தாய் வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வீடு மனை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். இன்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களே உடலில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட்டு வந்தால் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் இனிமையான நாளாக அமையும்.

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களேவிவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பணியின் காரணமாக பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் சந்தர்ப்பம் கனிந்து வரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். என்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு வர சிறப்பான நாளாக அமையும்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களே மறைமுக வருமானங்கள் சிலருக்கு உண்டாகும். பொருளாதார வசதி திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் இதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் நம்பிக்கையை உண்டாக்கும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் பழனியாண்டவரை வழிபட்டு வந்தால் சிறப்பான நாளாக அமையும். மீண்டும் நாளை சந்திப்போம் அதுவரை நன்றி வணக்கம்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *