Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 05.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். உங்களின் தனி திறமையின் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்வித்து மகிழ்ச்சி பெறுவீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உற்சாகமான நாளாக இருக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்றப் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.  உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனால் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டிய நாள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆறுதல் பெறலாம். உங்கள் பணிகளில் கொஞ்சம் கவனம் தேவை. சக பணியாளர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.  தேவையில்லாத செலவுகள் காணப்படும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு  அதிகமாகச் சிந்திப்பதை தவிர்க்க வேண்டிய நாள்.  பணிகளில் திருப்தி இருக்காது. உங்கள் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கும் நிலை ஏற்படும். அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து செல்வது நல்லது. இதனால் இருவருக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும்.  பணத்தை பத்திரமாகக் கையாள வேண்டும். கால் வலி ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். உங்கள் பணிகளில் உங்கள் திறமையின் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள்.  உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனைச் சரியான வழியில் செலவு செய்வீர்கள்.  ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்கு  சவாலான நாளாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டால், பதட்டமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கலாம்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதை விரைவாக முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் கோவத்தை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சி தராது. செலவுகளைக் குறைத்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  முயற்சிகளில் தடைகள் காணப்படும் நாளாக இருக்கும். இதனால் அமைதியின்மை மற்றும் பதட்டமாகக் காணப்படுவீர்கள்.  உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கவனமாகப் பணியாற்றவும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்குபெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். பதவி உஅயர்வு கிடைக்கும் நாள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் கடின உழைப்பின் காரணமாக பணவரவு அதிகமாகக் காணப்படும்.  சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும். பணியிடத்தில் சிறப்பாக வேலை செய்வீர்கள். இருந்தாலும் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உங்களின் வளர்ச்சி குறைவாகக் காணப்படும் நாளாக இருக்கும். நீங்கள் சாதகமான பலன்களை எதிர்பார்ப்பீர்கள்.  சக பணியாளர்களுடன் சில பிரச்சனைகள் உண்டாகும். அதனால் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நகைசுவை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  பணவரவு மகிழ்ச்சி தராது. முதுகு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  நீங்கள் விரைவாகச் செயல்படும் நாள். உங்கள் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிறந்த ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *