Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 10.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 10.10.2023

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

இன்றைய பஞ்சாங்கம்

10-10-2023, புரட்டாசி 23, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 03.09 வரை பின்பு தேய்பிறை துவாதசி. நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்


இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.

ரிஷபம்


இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாகச் செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்


இன்று பிள்ளைகள்மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.

கடகம்


இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

சிம்மம்


இன்று எந்தச் செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

கன்னி


இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாகச் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசுமூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.

விருச்சிகம்


இன்று தொழில் ரீதியாகப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு


இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளைச் சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.

மகரம்


இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.

கும்பம்


இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்


இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். திடீர் தனவரவு உண்டாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *