மேஷம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்லுறவை பராமரிக்க வேண்டும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. சூழ்நிலை அனைத்தும் உங்களுக்குச் சாதகமான பலன்களை அளிக்கும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அதிகமான பணிகள் காணப்படுவதால் பொறுமையாகவும் திறமையாகவும் பணியாற்ற வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை காணப்படாது. மேலும், சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் உங்கள் முயற்சிகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றப் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்திப் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. கடினமான சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். துணையுடன் உணர்ச்சி வசப்படுவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் கையாளும்போது கவனம் தேவை. மேலும், சக பணியாளர்களிடம் கவனமாக நடந்துகொள்வது நல்லது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும். பணவரவு ஏற்பட்டாலும் செலவும் ஏற்படும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். துணையுடன் சிறிய விஷயங்களையும் பெரிதாக்கி பேசுவீர்கள். சில கூடுதல் செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் சளி சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக நாளாக இருக்கிறது. பணியிடத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இதனைப் பயனுள்ள விஷயங்களுக்காகச் செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றிப் பாராட்டும் வெற்றியும் பெறுவீர்கள். துணையுடன் உண்மையான அன்பை வெளிப்படுத்தி மகிழ்வீர்கள். அதிக பணவரவு காணப்படும். இதனால் அதிக பணத்தை சேமிப்பீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். துணையிடம் நம்பிக்கையான இனிமையான உணர்வு கொள்ள வேண்டும். பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தமான பிரச்ச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் விரும்பத் தகாத சூழல் காணப்படும். துணையுடன் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.