மேஷம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் உயர் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள்.துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வெளியூர் செல்வீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நட்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் ஆரோக்கியத்தில் சளி சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் வேலைகளைச் சரியான நேரத்திற்கு முடிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனையைத் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணவரவு போதிய அளவில் காணப்படாது. ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் தொடை வலி பிரச்சனை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் செயலுக்கான பாராட்டு கிடைக்கும். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும், இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் தலைவலி மற்றும் சளி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க விட்டுக் கொடுத்துச் செல் வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். நிதிநிலைமை சிறப்பாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக நாளாக இருக்கிறது. பணியிடத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இதனைப் பயனுள்ள விஷயங்களுக்காகச் செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். துணையிடம் நம்பிக்கையான இனிமையான உணர்வு கொள்ள வேண்டும். பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தமான பிரச்ச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றிப் பாராட்டும் வெற்றியும் பெறுவீர்கள். துணையுடன் உண்மையான அன்பை வெளிப்படுத்தி மகிழ்வீர்கள். அதிக பணவரவு காணப்படும். இதனால் அதிக பணத்தை சேமிப்பீர்கள். மேலும், ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் விரும்பத் தகாத சூழல் காணப்படும். துணையிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். மேலும் செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.