Advertisements

மதுரை பாரப்பத்தி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது இந்த மாநாட்டில் எம்ஜிஆர் விஜயகாந்த் ஆகியோரை முன்னிலைப்படுத்தி விஜய் பேசினார் அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆர் பாடல்களையும் பாடினார்.
பழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மேடையில் ஒரு கதை சொல்வார் அதே பாணியில் விஜயும் ஒவ்வொரு மேடையில் ஒரு கதை சொல்லி வருகிறார் . அந்த வகையில் மதுரை மாநாட்டில் ஒரு ராஜா கதை சொன்னார் அதாவது ஒரு ராஜாவுக்கு நல்ல தளபதி வேண்டும் இதற்காக ஒரு பரிசோதனை வைத்தார் மொத்தம் 10 பேர் வந்தார்கள் பத்து பேரிடமும் நெல் விதை ஒன்றை கொடுத்தார்.
இதை யார் பெரிதாக வளர்க்கிறார்களோ அவரே அடுத்த தளபதி என்று அறிவித்தார் அதன்படி 10 பேரும் திரும்பி வந்தபோது ஒருவர் கையில் மட்டும் விதை நெல் வளரவே இல்லை மற்ற ஒன்பது பேரும் பெரிதாக வளர்ந்து கொண்டு வந்தார்கள். இதனைப் பார்த்த ராஜா விதை நெல் வளராமல் கொண்டு வந்தவரை தளபதியாக அறிவித்தார்’.
இதற்கு காரணம் அவர் 10 பேரிடமும் கொடுத்தது அவித்த நெல் அவித்த நெல் எப்படி வளரும் எனவே மற்ற ஒன்பது பேரும் பொய் சொல்லி விட்டார்கள்.இவர் தான் உண்மையானவர் என்று அவரை கட்டி அணைத்துக் கொண்டார். எனவே எல்லோரும் உண்மையாக இருக்க வேண்டும் பொது மக்களை நீங்கள் தான் அந்த ராஜா நான் தான் அந்த தளபதி என்று கதையை முடித்தார் விஜய் .
இதே கதை கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் சீமான் இந்த கதையை மேடையில் பேசினார் அவர் பேசியதற்கும் விஜய் பேசியதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் விஜய் பேசும் பொழுது ராஜா என்றும் தளபதி என்றும் குறிப்பிட்டார் . ஆனால் சீமான் பேசும் பொழுது ஒரு ஒரு ராஜா என்றும் இளவரசர் என்றும் குறிப்பிட்டார் இதைத்தவிர இருவரும் பேசியது ஒரே கதை தான் .
இது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட போது தம்பி விஜய் பேசியதில் ஒன்றும் தவறில்லை அந்த கதையை இந்த நிலத்தில் நான் முதல் முதலாக சொன்னேன்.
Advertisements

