Advertisements

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். மூத்த சகோதர வகையில் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. என்று நீங்கள் பெருமாளை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.
ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சமூக நிகழ்வுகள் மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி நல்ல முன்னேற்றம் அடைய முடியும்.. உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். செய்ய வேண்டிய காரியங்களில் ஒரு சில தடைகள் வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். என்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும்.
மிதுனம்

மிதுன ராசி அன்பர்கள தொழில் வழியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். மனதில் சந்தோஷமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பண வரவு கூடும். விரும்பியதை அடைய புது வழி ஒன்று கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அகழும். சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். நட்பு வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். என்று நீங்கள் பிரித்திங்கரா தேவியை வழிபட்டு வர சிறப்பான நாளாக அமையும்.
கடகம்

கடக ராசி அன்பர்களே! உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது
. வீடு மனை போன்ற விஷயங்களில் சாதகமாக அமையும். குடும்ப பெருமை உயரும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள். எப்போதும் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். என்று நீங்கள் விநாயகர் பெருமானை வணங்கி வர மகிழ்ச்சியான நாளாக அமையும்.
சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருதல் போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் எதிலும் வெற்றியை எதிர்பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். என்று நீங்கள் வெங்கடேச பெருமாளை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.
கன்னி

இன்று நீங்கள் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. பயணங்களால் நிறைய அலைச்சல் ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் வீடு வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.
துலாம்

துலாம் ராசி அன்பர்களே சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். கணவன் புரிதல் உண்டாகும். திருமண காரியங்களில் வெற்றி உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து விஷயங்களும் நடக்கும். உங்கள் பேச்சிலும் செயலிலும் வேகமும் விவேகமும் இருக்கும். மனதில் புது செம்பும் உற்சாகமும் ஏற்படும். தூரத்து சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். என்று நீங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் கட்சியான நாளாக அமையும்.
விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் பேச்சுக்களில் பொறுமையை கடைப்பிடிக்கவும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். மறைமுக எதிரிகள் இருந்தாலும் அவர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் வகையில் கவனமாக நடந்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன் கிடைக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு வர இனிமையான நாளாக அமையும்.
தனுசு

தனுசு ராசி அன்பர்களே உடலில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் காத்திருந்தவர்களுக்கு திருமணம் யோகம் கூடிவரும். குடும்பத்தில் உங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ள அதிகம் போராட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியும் இருப்பது நல்லது. பயணத்தில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். என்று நீங்கள் மகாலட்சுமியை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்
மகரம்

மகர ராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். மனதில் புது உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் சுபச் செலவுகள் வரும். பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நிதானம் வேண்டும். பேச்சில் கனிவு அவசியம் ஆகும். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டி வரும். பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். பெருமாளை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும்.
கும்பம்

கும்ப ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் புத்தி கூர்மை வெளிப்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெற முடியும். தடைபட்ட திருமண காரியங்கள் கைகூடி வரும். அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமையும் புரிதலும் அதிகரிக்கும். இன்று நீங்கள் லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
மீனம்

மீன ராசி அன்பர்களே
மனதில் வைராக்கியம் கூடும். காப்பீடு தொடர்பான தன வரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் நீங்கள் மனதில் நினைத்த விஷயங்களை சாதித்து காட்ட முடியும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். எதிர்பாராத இடமாற்றம் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.
என்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மீண்டும் நாளை சந்திப்போம் அதுவரை நன்றி வணக்கம்
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

