Today Rasi Palan -இன்றைய ராசிபலன் – 16.09.2024

Advertisements

Today Rasi Palan – 16.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 31ம்-தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 03.52 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி : இன்று பிற்பகல் 01.30 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம் : சித்தயோகம்

நல்ல நேரம் காலை : 6.15 – 7.15

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் காலை : 07.30 – 09.00

எமகண்டம் காலை : 10.30 – 12.00

குளிகை மாலை : 1.30 – 3.00

கௌரி நல்ல நேரம் காலை : 09.15 – 10.15

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 – 8.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


வேலைச்சுமை இருக்கும். அதனைத் திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்


தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். விவசாயிகளுக்குக் கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்குப் பலிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மிதுனம்


வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்குக் கடன் பிரச்சினை தீரும். வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்


தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூடப் பிரச்சினையைத் தந்து நிரந்தரமாகப் பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்


கலைஞர்களின் கனவு பலிக்கும். தீர்க்கயாத்திரை மேற்கொண்டு மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமைக்குக் குறையிருக்காது. வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அணுகுமுறையைக் கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி


செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணத்திற்காக வரன் தேடியவர்களுக்கு வரன் கிட்டும். பிரபலங்களின் வீட்டில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். சில்லரை வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம்


காதலர்களுக்குப் பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள்மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். மாணவர்களுக்குத் தாங்கள் நினைத்த கல்லூரிகளில் சேருவதற்கு வழிகிடைக்கும். கடனின் வட்டித்தொகையை அடைத்து விடுவீர்கள். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்


தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். குறுகிய தூர பயணங்கள் நன்மையைத் தரும். சில்லரை வியாபாரம் லாபம் தரும். ஒரு சிலர் சில கிளைகளைத் துவங்குவர். நல்ல வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு


உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் தங்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்வார்கள். விருந்து விழா என்று சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட காலமாக நிறைவேற்ற வேண்டிய கடமையை இன்று முடித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்


இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். திட்டவட்டமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அலைச்சல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

கும்பம்


வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை. தள்ளிப் போன வெளியூர் பயணம் இன்று செல்ல ஆயத்தமாவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்வண்ணம்

மீனம்


வாங்கிய கடனை விரைவில் அடைப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு வேலையை முடிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *